பெரும்பான்மையான ஊடகங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முஸ்லிம் இளம்பெண் ஒருவர் ஹிந்து மத பஜனை பாடல்களை பாடியதை தொடர்ந்து முஸ்லிம் மத குருமார்கள்(!) கடுமையான பத்வாக்களை அறிவித்ததாக நாட்டையே பதற்றத்தில் வைத்திருந்தனர்.


ஆனால், அப்படி எந்த ஒரு பத்வாக்களையும் எந்த மத குருமார்களும் பிரயோகிக்கவில்லை . ஊடகத்துரையினர் கற்பனைக்கும் எட்டாத ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதையை பரப்பினார்கள்.இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய மத அறிஞர்கள் குறித்தும் வெகுஜன ஊடகங்கள் ஏன் இவ்வாறு ஒரு தலை பட்சமாக இருக்கின்றன? என கவலைப்படும் சூழலில்...


மார்க்க அறிஞர் ஒருவர், ஆக்கப்பூர்வமாக ஒரு மாநிலத்தில் சுகாதார சேவை புரிந்து ஒட்டு மொத்த இந்தியாவையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அஸ்ஸாமின் மங்கள் தை பகுதியில் உள்ள அல் ஜாமியத்துல் இஸ்லாமியா மத்ரசாவின் முதல்வரான முஃப்தி நசீஹுர்ரஹ்மான் அஸ்ஸாம் மாநிலத்தின் தூய்மை சேவகர் என அழைக்கப்படுகிறார்.


பள்ளிவாசலில் தொடங்கிய பரப்புரை


வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு சொற்பொழிவில் ரஹ்மான் சாப், தூய்மை தொடர்பான விஷயங்களை பேசத் தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல மஸ்ஜிதில் அவர் உரையை கேட்க வந்தவர்கள் உத்வேகம் பெற்றனர்.ஒரு சமயத் தலைவர் சமூகத்தை மாற்றும் அளவு செயல்படும் நிகழ்வானது சாதாரண மாற்றம் அல்ல. நிச்சயம் இது மிகச் சிறந்த பணி என்கிறார் அவரது வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டுவரும் கல்லூரி மாணவர் அஷ்ரஃபுல் இஸ்லாம். ரஹ்மானின் இந்த முயற்சி மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவரைப் போல் மேலும் ஏராளமான மவ்லானாக்கள் இந்த சமூகத்திற்கு தேவை. கழிப்பிட வசதி சுகாதாரமேம்பாடு குறித்து அவரைப் போல் நாடே அது குறித்து அக்கறை கொண்டு கவனம் செலுத்த வேண்டும். தூய்மை, தண்ணீர், கழிப்பிடம் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாற்றத்தைக் கொண்டு வரும் இது வலிமையான நாட்டை கட்டமைக்கும் என கவுஹாத்தியை சேர்ந்த பத்திரிக்கையாளர் தெரெசாரஹ்மான் கூறுகிறார். முஃப்தி நஸீஹுர்ரஹ்மானை பொறுத்த வரை மோடி ச்வச்பாரத் என்ற பெயரில் க்ளீன் இந்தியா என்ற பில்டப் பரப்புரையை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சுகாதார சேவையை தொடங்கி விட்டாரென்பது இங்கு குறிபிடத்தக்கது.


10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பணி


இதுகுறித்து முஃப்தி நஸீஹுர் ரஹ்மான் கூறும்போது, நான் உண்மையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பணியை தொடங்கிவிட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக எனது அர்ப்பணிப்பு அதிகரித்தாலும் என்னுடைய ஆழ்ந்த உரை கேட்டு, மக்கள் ஆதரவு கடந்த 4 ஆண்டுகளாக பெருகி வருகிறது. மக்களில் ஒரு பிரிவினர் என்னை கேலியும், கிண்டலும் செய்தனர். ஆனால், நாளடைவில் அவர்களே தாமாக முன்வந்து பின்னர் என்னை பின்பற்றத் தொடங்கினர்.தர்ராங் மாவட்டத்தில் சுமார் 200 மாணவர்கள் எமது சுகாதார அமைப்பில் இணைந்து, குடிநீரை சுத்தமாக பராமரிப்பது மற்றும் சிக்கனம் பற்றி ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.


இந்நிலையில், முஃப்தி நசீஹுர் ரஹ்மான் பல்வேறு சமயத் தலைவர்களை ஒருங் கிணைத்து கவுஹாத்தியில், அஸ்ஸாம் மாநிலத்திற்கான தூய்மை மாநாட்டை அண்மையில் சத்தமே இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்.


சுத்தம் ஈமானின் பாதியாகும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்அந்த நபிமொழியை மக்களிடம் பரப்பரை செய்து நடைமுறைப்படுத்தும் நசீஹீர் ரஹ்மான்கள் பெருகட்டும். முஃப்தி நஸீஹுர்ரஹ்மானை பொறுத்த வரை மோடி ச்வச்பாரத் என்ற பெயரில் க்ளீன் இந்தியா என்ற பில்டப் பிராச்சாரத்தை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தனது
(நிஜமான) சுகாதார சேவையை தொடங்கி விட்டார்.


Who's Online

We have 24 guests and one member online

  • Leonardrof