உ.பி.,யில் அரியணை ஏறிய யோகி ஆதித்யநாத் அரசு பொதுமக்களிடம், உடனடியாக தன் சர்வாதிகார முகத்தை காட்டத் துவங்கி உள்ளது.

பா.ஜ.க.விற்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தவுடன், தன் இந்துத்துவா முகத்தை காண்பிக்க, சாது முகமூடி அணிந்த முதல்வர் ஒருவரை கனக்கச்சிதமாக அரசு அரியணையில் அமர்த்தி விட்டார் பிரதமர் நரேந்தர மோடி.

யோகியின் பதவி ஏற்பு தினத்தில், லக்னோவிற்கு வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, ‘சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்படும்’ என அறிவித்து பச்சைக் கொடி அசைத்ததை அடுத்து, முதல்வர் யோகி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். உடனடியாக அதன் சூட்சுமத்தை புரிந்து கொண்ட அரசு அதிகாரிகள் முதல்வர் யோகியை குஷிப்படுத்தும் முயற்சியில் காலில் சக்கரத்தைக் கட்டிகொண்டு இறங்கினர்.. அவர்களுக்கு பக்கபலமாக பொதுநலம் எனும் பெயரில் பா.ஜ.க.வினர் ஆவேசத்துடன் களம் இறங்கினர். முறையான அரசு உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களுடன் அதன் விற்பனைக் கூடங்களையும் மூட வலியுறுத்தி அதிகாரத்துடன், அடித்தட்டு வியாபாரிகளை அச்சுறுத்தினர்.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் அவசர அவசரமாக வீதியில் இறங்கி இறைச்சிக் கடைகளின் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுநலம் எனும் முகமூடியில் இருந்த பா.ஜ.க.வினர் அங்கிருந்த சில இறைச்சிக்கூடங்களுக்கு தீ வைத்து கொளுத்தி எக்காளமிட்டு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு காலம் தாழ்த்தி ஊர்ந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்த, கண்துடைப் புக்காக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால், காவல் துறையினரின் ஆதரவில் தான் காவிப்படையினர் அடித்தட்டு வியாபாரிகளின் இறைச்சிக்கடையை தீ வைத்து கொளுத்தி கும்மாளமிட்டதாக தெரியவருகிறது.

உ.பி.,யில் ’பசு பாதுகாப்பு சட்டம் 1955 ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனவே, அம்மாநிலத்தில் பசு அல்லது மாட்டு இறைச்சி மற்றும் விற்பனைக் கூடங்கள் கிடையாது. எருமை இறைச்சிக் கூடங்களும் அதன் விற்பனை மட்டுமே உண்டு. பா.ஜ.க.,வின் அராஜகத்தால், கடந்த வாரம் இரு நாட்களாக, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சி விற்பனை கூடங்களும் வியாபாரிகளை கட்டாயப்படுத்தி அவர்களின் சம்மதத்துடனேயே இழுத்து மூடப்பட்டன.

இதனால், அடித்தட்டு நடுத்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், கோழி இறைச்சி ரூ.140-ல் இருந்து 240 ஆக தாறுமாறாக உயர்ந்தது. லக்னோவில், முகலாயர் காலம்தொட்டு இன்று நான்காவது சந்ததி வரை தொன்று தொட்டு பாரம்பரியமாக நடத்தி வந்த ‘டூண்டா கபாப்’ எனும் பிரபல இறைச்சி விற்பனை கடையும் இழுத்து மூட வேண்டிய கட்டாய சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. உ.பி.,யில் புலால் உண்ணும் சமூகத்தினர் சரி பாதி சதவிகிதத்தினர் மாற்று மதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தேடல் என்ற பெயரில் அத்துமீறல்

அடுத்து முதல்வர் யோகியின் அதிகார அடக்குமுறை அம்பு இளைஞர்களை குறி பார்த்தது. கலாச்சார காவல் என்ற பர்வையில், ‘இதனால், ஓர் தாய் வயிற்றில் பிறந்த சகோதரனும், சகோதரியும் சாலையில் நடந்து சென்றபோது சந்தேகப்பார்வையுடன் தடுத்து நிறுத்தி கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பூங்கா மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட தனியார் உணவு விடுதிகளில் புகுந்த போலீஸார், அங்கு உணவு வேளையில் இருந்த இளம் ஆண்களிடமும், பெண்களிடமும் ‘இங்கு நீ குடிக்கும் காப்பியையும், பீசாவையும் உன் வீட்டில் போய் சாப்பிடு’ என கன்னங்களில் அறைந்து வெளியேற்றினார்கள்.அதேபோல, கலாச்சார காவல் திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட போலீ சார் அவர்கள் பங்கிற்கு, இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்ற இளம் ஜோடிகளை போலீஸார் மடக்கிப் பிடித்து, மிரட்டி பணம் வசூல் செய்யத் துவங்கினர். இதனால், டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் ஒரு இளைஞனுடன் பிடிபட்ட இளம்பெண் எந்த வழக்கும் இன்றி காவல்துறை வாகனத்தில் மிரட்டி ஏற்றிச் செல்லப்பட்டார்.

மேலும், அந்தப் பெண்ணை காது கூசும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த இளம்பெண் தன் மொபைலில் வீடியோவாக்கி யூ டியூப் இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுபோல், நூற்றுக்கணக்கான வீடீயோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்த நிகழ்வுகள் யோகியின் கவனத்திற்கு வந்த பிறகும் எந்தவிதமான பதில் நடவடிக்கைகளும் இல்லை.

யாதவ காவல் அதிகாரிகளுக்கு குறி

யோகியின் அடுத்த அம்பில் பலியானவர்கள் உபி காவல்துறையினர். லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ் காவல்நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த யோகி. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இவர்கள் அனைவருமே கடந்த முறை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியாளர்களின் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு, உ.பி., காவல்துறை அதிகாரிகள் இடையே யோகி மீது கடும் அதிருப்தியை கிளப்பி உள்ளது. முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ், ‘குறிப்பிட்ட சமூகத்தவர்கள் குறி வைக்கப்படுகின்றனர்.’ என யோகியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உபியின் 24 சதவிகிதம் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அங்கீகாரம் தராத பாஜக அரசு, முன்னாள் கிரிக்கெட் வீரர் மோசின் ராசாவை முஸ்லிம் அமைச்சராக அமர்த்தியுள்ளது. மோசின், முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையை துவக்கத்திலேயே பொதுமக்களிடம் சிதைத்து விட்டார். அதன்படி, அவர் உ.பி., முஸ்லிம்கள் தம் புனித யாத்திரையாக ஹஜ் செல்லக் கிடைக்கும் அரசு மானியத்தை விட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேசமயம், கைலாஷ் மான்சரோவர் புனித யாத்திரைக்கு செல்லும் இந்துக்களின் உபி மாநில அரசு மானியத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக யோகி மூலம் உயர்த்தி விட்டார்.டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் ஒரு இளைஞனுடன் பிடிபட்ட இளம்பெண் எந்த வழக்கும் இன்றி காவல்துறை வாகனத்தில் மிரட்டி ஏற்றிச் செல்லப்பட்டார். மேலும், அந்த பெண்ணை காது கூசும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த இளம்பெண் தன் மொபைலில் வீடியோவாக்கி யூடியூப் இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Who's Online

We have 30 guests and one member online

  • Leonardrof