கேரளாமாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் பள்ளிவாசலிலேயே இமாம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் பாஜகவைச் சேர்ந்த மூவரை கைதுச் செய்துள்ளனர். காசர் கோடு இமாம் கொலையும் பாஜககாரர்கள் பிடிபடுவதும் மீண்டும் ஒருமுறை சமூக நல்லிணக்கத்தை அந்த பகுதியில் குலைக்க முயலும் சதியாகவே நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகிறது.


காசர்கோடு மாவட்டம் மாத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சூரி என்றொரு சிறிய கிராமம் இஷா அத்துல் இஸ்லாம் மதரஸாவில் 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் 34 வயதான ரியாஸ் என்ற மார்க்க அறிஞர். அந்த இளம் மவ்லவி ரியாஸ் மார்ச் 20 தேதியன்று தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் முஹியத்தீன் பள்ளிவாசலில் உயிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.


எஸ் அஜேஸ் (20), அகிலேஷ் (25) மற்றும் நிதின் (19) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 ம் தேதி படு கொலை நடந்த நிலையில் 24ம் தேதி சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கும் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது பாஜகவின் வெறுப்பு பரப்பும் செயலால் மவ்லவி ரியாஸ் பலியாகிவிட்டதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொலையாளிகள் அண்டை வீட்டுக்காரர்கள்

இது சூரி பகுதியில் மட்டும் நடந்த தற்செயலான ஒன்றாக மட்டும் பார்க்க முடியாது, மாத்தூர் பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இது போன்ற கொலைகள் செய்யும் அளவுக்கு துணிச்சலை பெற்றுள்ளனர். ரியாஸ் மவ்லவியை கொலை செய்தவர்கள் அவரின் அண்டை வீட்டுக்காரராக இருந்துள்ளனர். மத வெறுப்புணர்வு கொண்டவர்கள் தான் அவரை கொன்றுள்ளனர். என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. வேறு காரணங்கள் இருக்க முடியாது. கண்ணூர் குற்றவியல் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார். சூரி வெகுவிரைவில் மதவெறி கூடாரமாக மாறிவிடும் அபாயம் தெரிகிறது. . மதத்தின் பேரால் மக்களை பிளவு படுத்தி அதனை அறுவடை செய்ய பாஜக துடிக்கிறது. இங்கு வெளியூரில் இருந்து வருபவர்கள் தான் மதவெறியை தூண்டுகின்றனர் இதனை தடுக்க சக்தியற்ற நிலையில் அது குறித்து விழிப்பு அற்ற உள்ளூர் காவல் துறையினர் முக்கிய காரணம்.


சூரி முஸ்லிம் பகுதியாக இருந்தாலும் இதனை சுற்றி ஹிந்து பெரும்பான்மை பகுதிகள் உள்ளன. 2005 ல் இருந்து 2009 வரை இங்கு மத பதட்டம் அதிகரித்து வருகிறது. 2009ல் றிசாத் என்ற முஸ்லிம் இளைஞன் ஆர் எஸ் எஸ் காரர்களால் படுகொலை செய்யப்பட்டான். ஸாபித் என்ற மற்றொரு இளைஞர் 20013 ல் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான்.


சூரியில் தற்போது முஸ்லிம் மக்கள் அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் தலங்கரா , நெல்லிக்குன்னு, காசர் கோட்டில் உள்ள துருத்தி ஆகிய பகுதிகளில் இருந்து இங்கு குடியேறியுள்ளனர். இங்கு நிலத்தில் விலை குறைவாக இருந்ததால் மக்கள் 90 களில் இருந்தே குடியேறத்தொடங்கி விட்டனர் என்கிறார் நெல்லிக்குன்னுவை சேர்ந்த ஆபித்பாஷா முகம்மது
2000 வரை மக்கள் ஒற்றுமையுடன் எந்த வித சச்சரவின்றி வாழ்ந்துள்ளனர். பாஜக கர்நாடகாவில் பரபரப்பாக வளர்ந்து ஆட்சியை பிடிக்கும் அளவு வந்த பிறகு கர்நாடகாவின் எல்லை மாவட்டமான காசர்கோட்டிற்கு மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சங்பரிவார் கும்பல் தொடர்ந்து வந்து வெறுப்பு பரப்புரையை தொடர்ந்துள்ளனர். மாத்தூர் பஞ்சாயத்தை வெறுப்பு கூடாரமாக்கி பாஜகவே பெரும்பான்மை பெற்றுள்ளது . இங்கு உள்ளாட்சியில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களை மட்டுமே பெற பாஜக 16 இடங்களில் வென்றது. ஹிந்து வாக்குகள் பாஜகவுக்கு மட்டுமே செல்ல காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் காட்சிகள் செல்வாக்கு இழந்தன என்கிறார் அப்பகுதியின் அஸ்கர்.


காவல்துறை பாராமுகம்

மதவெறி ஏற்படுத்தி பழிக்குப்பழி என்ற வெறியை உருவாக்கி அரசியல் லாபம் பெற முயல்கிறார்கள் ஆனால் முஸ்லிம் அமைப்புகள் அமைதியை மீண்டும் மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள். காவல்துறையினரின் செயல்படாத தன்மையில் குற்றவாளிகள் சுலபமாக ஜாமீன் பெற்று தப்பித்து விட்டனர் என கவலை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்
உள்ளூர் அரசியல் தலைவர்கள் ரிஷாத் வழக்கில் பல புகார்களை தெரிவித்தும் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொலைகாரர்கள் என கருதப்பட்ட அஜேசும் , நிதினும் உள்ளூரில் நடந்த பேட்மிட்டன் போட்டியின் போது பொதுமக்களை வாளால் மிரட்டியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பிரமுகர்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் புகார் அளித்தும் புறக்கணித்துள்ளனர் என முஸ்லீம் லீக்கை சேர்ந்த வழக்கறிஞர் ஷுக்கூர்.

பாஜக பகுதிகளில் கொலைகாரர்கள் கலவரக்காரர்கள் ஹீரோக்களை போன்று பார்க் கப்படுகின்றனர் அவ ர் களுக்கு வாகனங்கள் பரிசளிக்கப்படுகின்றன. உள்ளூர் காவல்துறையின் திறமையற்ற மற்றும் கண்டு கொள்ளாத போக்கு அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது . காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் . அந்தப்பகுதிகளில் செயல்படாத காவல்துறை இருப்பது தோழர் பினராயி விஜயன் ஆட்சிக்கு களங்கமாகும் . இதனை அவர் களைய முயல்வேண்டும். மேலும் யு ஏ பி ஏ சட்டத்தின் அடிப்படையில் கொலைகார தீவிரவாதிகளை விசாரித்து தண்டனை பெற்று கொடுக்கவேண்டும் . இமாம் என்பவர் தனி நபரல்ல .இந்த படுகொலை உள்ளிட்ட அனைத்து கலவர கொலைகளுக்கும் தீவிர நடவடிக்கை தேவை என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


Who's Online

We have 53 guests and no members online