மோடி அரசின் செல்லாப் பண அறிவிப்பில் வங்கி வாசல்களிலும். ஏடிஎம் வாசல்களிலும் எளிய மக்கள் நீண்டநெடிய வரிசையில் நிற்கும் அவலம்.

பல இடங்களில் சட்ட நெரிசலில் சிக்கியும், வெயில் தாளாமலும், அதிர்ச்சியிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கீழக் கரையில் 21.12.2016 அன்று, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வாசலில் வரிசையில் நின்ற 60 வயதான சித்திக் அலி மயங்கி விழுந்த மரணமடைந்துள்ளார்.

23.12.2016 அன்று கீழக்கரை வடக்குத் தெரிவில் உள்ள சித்திக் அலி இல்லத்திற்கு தமுமுக மாநிலச் செயலாளர் பேர.ஹாஜாகளி, தமுமுக கீழக்கரை நகரச் செயலாளர் சிராஜ்தீன் உள்ளிட்டடோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். முதலிரண்டு நாட்கள் பணமெடுக்கப்போய் பணமில்லாமல் திரும்பி மூன்றாவது நாள் வரிசையில் நிற்கும் போது இந்தக் கொடுமை நடந்துள்ளது.

இன்னும் எ த் தனை உயிர்கள் போகக் போகிறதோ.


Who's Online

We have 56 guests and no members online