தமிழகத்தில் காலியாக உள்ள 38ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்களை அரசுஉடனே நிரப்ப வேண்டும் என்று சத்துணவு ஊழியர்சங்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் 32 மாவட்டங்களில் 42ஆயிரத் துக்கும் மேற்பட்ட சத்துணவு   மையங்கள் செயல் படுகின்றன. இதில் 1லட்சத்து 28ஆயிரத்து 132பணியிடங்கள் உள்ளன. சத்துணவு அமைப் பாளர்கள் 42,423பேர், சமையல் உதவியாளர்கள்  42,855 பேர்,சமையலர்கள் 42,855பேர் என பணிபுரிகிறார்கள். 

இவர்களின் எண்ணிக்கை யில் நிரப்படாத 38ஆயிரம் பணியிடங்கள் 3ல் 1 பங்குக்கும் கூடுதலாகஇருக்கிறது.

சத்துணவு மையங்கள் பலற்றில் சத்துணவுஅமைப்பாளர் இருக்கும் போது சமையலர் இல்லை.சமையலர் இருந்தாலும் அமைப்பாளர்,உதவியாளர் இல்லை என்ற நிலை தான் இருக்கிறது. இதனால்கூடுதல் பணிசுமையும் மன அழுத்தமும் ஏற்படுவதாககுறை கூறுகின்றனர். சத்துணவு பணியாளர்கள் காலிப்பணியிடங்களைநிரப்பு வதற்கான நியமனக் குழு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இருப்பினும், பணியிடங்கள் நிரப்புவது ஒரு சில மாவட்டங்களை தவிர பிறமாவட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டுவருகின்றதாம்.

சமையலர்களை பணியிட நியமனம் செய்வதற்கு2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தடையாணைஇருந்து வந் தது. இதனால் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணி யிடங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் நியமனக்குழு மூலம் நிரப்பப்பட்டு வந்தன.இதற்கிடையில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதில் இருந்த தடையை நீக்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் சமையலர் பணி யிலிருப்போரை, பதவி உயர்வு மூலம் சத்துணவு அமைப்பாளராகநியிமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால்சத்துணவு ஊழியர் கள் பணியிடங்களை மட்டும்இதுவரையில் அரசு நிரப்பாமல் இருக்கிறது. 

மேலும், சிறப்பு காலமுறை ஊதியமுறையை மாற்றி,காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர குடும்பஓய்வூதியம் வழங்க வேண்-டும். பணியின் போதுஇறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என சத்துணவு சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன. 

- ஜி அத்தேஷ்


Who's Online

We have 47 guests and one member online

  • ymegywu