தமிழின் உரிமைகளை சிறுமைப்படுத்தும், கொடுமைக்கெதிராக  சீற்றம் காட்டிக் களமிறங்கிய மாணவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின்களங்கள் அனைத்தையும் கைப்பற்றி விட்டனர். 

மாணவ உலகத்தின்மாபெரும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாசிச பாஜகவின் மக்கள் விரோதமான, மாநில உரிமைகளுக்கு எதிரானஅடாவடிகளுக்கு எதிராக, அடலேறுகள் அணிதிரண்டு, ஒற்றைக்குரலில்ஓங்கி முழங்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களமிரங்கியஇந்த மாணவர்கள் தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினைகள் குறித்தும்முழக்கம் எழுப்புவது வரவேற்புக்குரியது. 

மதவெறியின் மூலம் மக்களைப் பிளந்து தமிழ்நாட்டைதனதாக்கிக் கொள்ளாலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சங்கபரிவாரகும்பலுக்கு, இந்த இளைஞர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளதோடு, தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் பறைசாற்றியுள்ளனர். எழுச்சியோடுநடந்துவரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தின் சிறப்பம்சங்கள் சில,

♦ மாணவர் போராட்டமாகத் தொடங்கி,மாநில மக்களின் போராட்டமாகமாறியது.

 பொதுச் சொத்துகளுக்கு  சேதாரம் இல்லாமல், மிகுந்தகட்டுப்பாட்டோடும்,அகிம்சை வழியிலும் போராட்டத்தை முன்னெடுப்பது.

 சங்பரிவாரம் விரித்த சகல விதமான சதி வலைகளிலும்சிக்காமல்,அவர்களின் முகத்திரையைக் கிழித்தது.

 எந்த அரசியல் கட்சியாலும் கடத்தப்பட முடியாமல், ஆதரவானஅரசியல் தலைவர்களையும் கூட ஒரு தொலைவிலேயே நிறுத்திதனித்துவத்தைப பறைசாற்றியது.

 எல்லாவற்றிற்கும் மேலாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களுக்குஅவர்கள் தரும் மதிப்பும்,கண்ணியமும்.

 பயிற்சிபெற்ற ராணுவம் போல, சுழற்சி முறையில் போராட்டத்தைத்தொடர்ந்து, களத்தைப் பாதுகாப்பது என்று பல்வேறு சிறப்புகளைச்சொல்லலாம்.

 இந்து, முஸ்லிம் என தமிழ்ச் சமுதாயத்தைப் பிளந்து, முஸ்லிம்களைத்தனிமைப் படுத்தி விடலாம் என்ற பாஜகவின் கனவுகளில்,மெரினாகடற்கரையின் மண்ணையும், அலங்காநல்லூர் புழுதியையும் கலந்துபோட்டுள்ளது கன்னித் தமிழ்நாட்டு கணினித் தமிழ் இளையோர் கூட்டம்.

20.1.2017 வெள்ளியன்று மெரினா கடற்கரையில் வி.இல்லம்எதிரே,மாபெரும் திரளோடு ஜும்ஆ தொழுகை நடத்தப் பட்டுள்ளது.போராட்டக் களத்திலும் மார்க்கக் கடமையை முஸ்லிம்கள் நிறைவேற்ற,தமிழ் இளைஞர் கூட்டம் உதவி செய்துள்ள காட்சி சங்பரிவாரத்தின்நெஞ்சை வெடிக்க வைத்துள்ளது. பல ஊர்களிலும் , ஜும்ஆ தொழுகைமுடித்தபின் முஸ்லிம்கள்,ஊர்வலமாக சென்று தமிழர்நாட்டுஉரிமைக்குப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தந்துள்ளனர். சங்பரிவாரத்தின் மதவாதம்,மோடியின் மாயாவாதம்,அனைத்தும் நமதுதமிழ்க் காளைகளின் கொம்பு பதம் பார்த்துப் படுக்கையில் வீழ்த்திவிட்டது. இந்த

இளைஞர் கூட்டம் வாழ்க... இந்த ஒற்றுமை நீள்க..

-மரியம் குமாரன்


Who's Online

We have 99 guests and one member online

  • ZeettReuck