மக்கா மஸ்ஜித் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு! பள்ளிவாசல்களில் ஷரிஅத் கவுன்சில் செயல்பட தடை இல்லை

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிநாடு வாழ் இந்தியரான அப்துல் ரகுமான் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை அண்ணா சாலையில்  உள்ள மக்கா மஸ்ஜித்  பள்ளிவாசலில் ஷரிஅத் கவுன்சில் என்ற பெயரில் நீதிமன்றத்தை போன்று செயல்படுவதாகவும், கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் கூறி ஷரிஅத் கவுன்சிலுக்கு தடை விதிக்குமாறு கோரியிருந்தார். அப்துல் ரஹ்மானுக்காக மூத்த வழக்கறிஞர் சிராஜீத்தீன் என்பவர் ஆஜரானார்.

 இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி  சஞ்சை கிஷன் கவுல், எம். சுந்தர் அடங்கிய முதல்  அமர்வு தமிழகத்தில் செயல்படும் சட்ட விரோதமான இத்தகைய நீதிமன்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது; வழிபாட்டுத் தலங்கள் வழிபாட்டுக்கு மட்டுமே. இது போன்ற சட்ட விரோத நீதிமன்றங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மக்கா மஸ்ஜிதில் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்கள் தள்ளி வைத்தனர்.

 நீதிமன்றத்தின் இந்த உத்தரவும், தலைமை நீதிபதியின் தேவையற்ற கருத்துக்களும் தமிழகத்தில் வசிக்கும் ஒரு கோடி முஸ்லிம்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போதாதக்குறைக்கு ஊடகங்களும் பள்ளிவாசல்களில் கட்டப் பஞ்சாயத்து செய்வதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறபித்திருப்பதாக செய்தி பரப்பினர். இதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தேவையற்ற பதட்டமும்,அமைதியின்மையும் ஏற்பட்டது.

 மூத்த வழக்குறைஞர் அஜ்மல் கான்

 முஸ்லிம் பெயரில் வேண்டுமென்றே பொது அமைதியை குலைக்கும் விதத்திலும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளவும் போடப்பட்ட இவ்வழக்கை சட்டரீதியாக சந்திக்க முடிவெடுக்கப் பட்டது. 

பேரா.ஜவாஹிருல்லா உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்து நீதிமன்றத்தில் சமுதாயத்தின் சார்பாக ஆஜராகி வாதாட மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்குறைஞரான அஜ்மல் கான் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.  இதனை தொடர்ந்து மக்கா பள்ளிவாசல் ஷரீஅத் குழுவிற்காக மூத்த வழக்குறைஞர் அஜ்மல் கானும் அவருக்கு துணையாக வழக்குறைஞர் நிசார் அஹ்மதும் ஆஜரானார்கள்.

 கடந்த 19ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான  மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் இவ்வழக்கு எவ்வித  ஆதாரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

வழக்கின் நான்காவது எதிர் மனுதாரரான மக்கா மஸ்ஜிதில் எவ்வித நீதிமன்ற பணிகளும் நடைபெறவில்லை. கடந்த 20 வருடங்களாக ஷரிஅத் கவுன்சில் என்ற பெயரில் குடும்ப பிரச்சனைகளை இஸ்லாமிய ஷரிஅத்  சட்ட அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்கும்  சமரச மையம் மட்டுமே  செயல்பட்டு வருகிறது என்றார்.  அப்போது மனுதாரரின் வழக்குரைஞர் சிராஜீதின் அங்கு நீதிமன்றம் தான் நடைபெறுகிறது. மனுதாரரை அடித்து மிரட்டி விவாகரத்து தரக் கோரி  மிரட்டினார்கள் என்றார். நீதிபதிகள் மக்கா மஸ்ஜித்தில் நீதிமன்றம் செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்? நீதிமன்றத்தைப் போலவே அங்கு நடைமுறைகள் உள்ளதே என்று கேள்வி எழுப்பினர்.

 அதற்கு மூத்த வழக்குரைஞர் அஜ்மல் கான் அங்கு நடைபெறுவது நீதிமன்ற பணிகள் அல்ல, நிர்வாக வசதிக்காக சில நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதை நீதிமன்றம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. கிக்ஷீதீவீtக்ஷீணீtவீஷீஸீ ணீஸீபீ சிஷீஸீநீவீறீவீணீtவீஷீஸீ கிநீt (நடுவர் மற்றும் சமரசம் சட்டம்) சட்டப்படி இரண்டு தரப்பினர் இடையே அவர்கள் விரும்பும் பட்சத்தில்  சமரசம் செய்து வைக்க சட்டத்தில் இடமுள்ளது. அந்த  அடிப்படையில்  ஒரு சமரச  மையமாகத்தான் மக்கா மஸ்ஜிதின் ஷரிஅத் கவுன்சிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாத்துகளிலும் நடைபெறுகிறது. கடந்த 20வருடங்களாக செயல்படும் மக்கா மஸ்ஜித் சமரச மையத்தின் மூலமாக 1200 குடும்ப பிரச்சனைகள் விசாரிக்கப்பட்டு அவற்றில் 80 சதவீத குடும்பங்கள் மீண்டும் இணைந்துள்ளன. சமரச மையத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் தாராளமாக நீதிமன்றங்களை நாடி தங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள எவ்வித தடையுமில்லை. யாரையும் கட்டாயப் படுத்தியும் அழைப்பதில்லை என்றார்.

உச்சநீதிமன்றமே ஷரிஅத் கவுன்சில்களை அனுமதித்துள்ளது

மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஷரிஅத் கோர்ட்டுகளை தடைசெய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கான க்ஷிவீsலீஷ்ணீ லிஷீநீலீணீஸீ விணீபீணீஸீ க்ஷிமீக்ஷீsus ஹிஸீவீஷீஸீ ஷீயீ மிஸீபீவீணீ & ளிtலீமீக்ஷீs என்ற  வழக்கில்  ஷரிஅத் கோர்ட்டுகள் என்ற பெயரில்  மாற்று நீதிமன்றங்கள் (றிணீக்ஷீணீறீறீமீறீ சிஷீuக்ஷீts ) செயல்படுவதை ஏற்க முடியாது எனினும் முஸ்லிம்கள் தங்கள்  மத அடிப்படையில் மத அறிஞர்கள், ஷரிஅத் கவுன்சில்களில் தங்கள் குடும்ப பிரச்சனைகளை சமரசமாக தீர்த்துக் கொள்வதில் எவ்வித தடையும் இல்லை. எனினும் நீதிமன்றங்களில் தீர்ப்பே இறுதியாக இருக்கும் என்று  கூறியதை  எடுத்துரைத்து இத்தகைய ஷரிஅத் கவுன்சில்களுக்கு தடை விதித்தால் தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் மதம் சார்ந்த உரிமைகளை அனுபவிக்க முடியாததோடு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறும் அவல சூழலும் உருவாகும். 

ஏற்கெனவே குடும்பநல நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய பாதிப்புகளை  ஏற்படுத்தும் என்றார்.

 இது பொது நல வழக்கு அல்ல சுய நல வழக்கு

 மேலும் வழக்கின் மனுதாரர் கடந்த 2014ம் ஆண்டே  தனது மனைவிக்கு விவாகரத்து வழங்கி விட்டார். பிறகு 2016ல் மக்கா மஸ்ஜித் ஷரிஅத் கவுன்சிலை அணுகி இரு தரப்பும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதை மறைத்து விட்டும், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை மறைத்து விட்டும் பொது நல வழக்கு என்ற பெயரில்  தனது தனிப்பட்ட வெறுப்பை காட்டவும், சிலரின் முறையற்ற தூண்டுதலாலும் இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். இது பொது நல வழக்கே அல்ல  சுய நல வழக்கு இத்தகைய வழக்குகளை நீதிமன்றம் அனுமதித்து தனது பொன்னான நேரத்தை வீணடிக்க கூடாது என்று அறிவார்ந்த சட்ட நுணுக்கத்தோடு தனது வாதங்களை நிறைவு செய்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் நீதியரசர்களுக்கு வழங்கப்பட்டது.

 இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதியரசர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும்  ஷரிஅத் கவுன்சில்கள் நீதிமன்றங்களைப் போல செயல்படாமல் சமரச மையங்களாக செயல்படுவதில் எவ்வித தடையும் இல்லை. தானாக முன்வருவோரின் பிரச்சனைகளை சமரசம் செய்யலாம் எனினும் எதிர் தரப்பினர் சமரசத்தை ஏற்கவில்லை யென்றாலும் அத்தரப்பு  நீதிமன்றத்தை நாட அறிவுறுத்த வேண்டும் என்று வழக்கை முடித்து வைத்தனர். மக்கா மஸ்ஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. ஷரிஅத் கவுன்சில் என்ற பெயரில் செயல்பட எவ்வித தடையும் இல்லை. முஸ்லிம்கள் தராளமாக தங்கள் திருமண விவகாரங்களை ஷரிஅத் கவுன்சிலுக்கு கொண்டு சென்று மார்க்க அடிப்படையில் தீர்வு பெறலாம். இத்தகைகைய ஷரிஅத் கவுன்சில்களை பதிவு செய்து கொள்வது சிறந்தது. முஸ்லிம் சமூகத்தின் மீதான சட்ட ரீதியான தாக்குதலை சட்ட பூர்வமாக எதிர் கொண்டு நிவாரணம் பெற்று தந்த சமுதாய தலைமைக்கும்,வழக்கறிஞர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக!

 

- இனியவன் 


Who's Online

We have 92 guests and one member online

  • ZeettReuck