அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல்துறை வன்முறை கண்டிக்கத்தக்கது!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் இளைய தலைமுறை முன்னெடுத்து மதம் சாதியைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத காவல்துறையின் அடக்குமுறை மூலம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்; கொடும்விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை அகற்ற வேண்டும்;பீட்டா அமைப்பின் மீது தடைவிதிக்க வேண்டும் - ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழக முக்கிய நகரங்களில்  அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வந்தது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்த பிறகும் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக டெல்லி செல்லும் முன்பு போராட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகளுடன் பேசிய முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள், அவசரசட்டம் பிறப்பித்த பிறகு போராட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவசர சட்டத்தின் பரிணாமத்தை விவரித்திருந்தால் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும். ஜனவரி 23 காலை,  உலக மக்களையெல்லாம் கவர்ந்த சென்னை மெரீனாவில் போராட் டத்தை நடத்தி வந்தவர்கள் அதனை முடித்துக்கொள்வதற்கு ‘ஐந்து மணிநேரம் அவகாசம் தாருங்கள்  என்று கேட்டுக் கொண்டார்கள். அவசரசட்டம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொண்ட தமிழக அரசு ஒரு சில மணிநேரம் கூட அவகாசம் அளித்திருந்தால் தேவையற்ற நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாம்.

 தீயசக்திகள்

ஆனால் அதற்குப் பதிலாக காவல்துறை இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை கலைக்கும் யுக்தியை அமைத்துக் கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றமே போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடிநடத்தப்பட்டது என்று காவல்துறையை கண்டித்துள்ளது. போராட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறைஎடுத்துக்கொண்ட முயற்சிகள் கடும்வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. சமீபகால தமிழக வரலாற்றில் இல்லாதஅளவிற்கு சென்னை, கோவை, மதுரை, ஈரோடுமுதலிய நகரங்களில் காவல்துறையினர் பெண்கள் உட்பட அனைவர் மீதும் வன்தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சென்னையில் ஐஸ் அவுஸ் காவல் நிலையம்மற்றும் அதற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீ வைப்புச் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

அமைதியாக ஏழு நாட்கள் நல்லொழுக்கத்துடன்நடத்திவந்த போராட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சில தீய சக்திகள் ஊடுருவி இத்தகைய வன்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.   ஒரு குறிப்பிட்ட வன்கும்பல் திட்டமிட்டு திருவல்லிக்கேணியில் வன்முறையில் ஈடுபட்டது என்று அந்த பகுதியில் உள்ள நடுநிலை மக்கள் தெரிவிக்கிறார்கள்.  மெரினா என்னும் தேன்கூட்டில் கைவிட்டதால் சென்னை முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது.இப்போராட்டத்தில் காயம் அடைந்தவர்களுக்குஉயர் சிகிச்சை அளிப்பதற்கும், இழப்பீடு வழங்குவதற்கும் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஒட்டு மொத்தமாக ஜனவரி 23ம் தேதி நடைபெற்ற வன்முறைகளுக்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 அண்ணா வழியில்

பொது வாழ்வில் ஈடுபடும் போது வரும் விமர்சனங்களை பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் எதிர்கொள்வதாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். ஒரு முறை மாணவர்கள் போராட்டம் உச்சம்அடைந்த நிலையில் முதலமைச்சராக இருந்த அண்ணா நேரில் போராட்டக்காரர்களை சந்தித்து என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று தொடங்கி அரசின் நிலைப்பாட்டை விளக்கி சமாதானப்படுத்தினார். முதலமைச்சர் பன்னீர் அவர்கள் அண்ணாவின் இந்த வழியை பின்பற்றாமல் அமைதியாக போராடிய இளையோர் மீது காவல்துறையை ஏவியது மறக்க முடியாத குற்றம்.

-   பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா 


Who's Online

We have 50 guests and one member online

  • ymegywu