மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப்போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நிமோனியா, உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்னைகளை உண்டாக்கும். இந்த நோயால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.

ரூபெல்லா(மணல்வாரி அம்மை) கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால், பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா, இந்தியாவில் அதிகக் கருக்கலைப்புகளை ஏற்படுத்துகிறது.  தட்டம்மை மற்றும் மணல்வாரி அம்மை நோய்களுக்கான ரூபெல்லா தடுப்பூசியை தமிழகத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக போடுவதற்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. 

அந்த திட்டத்தின்படி வரும் பிப்ரவரி 6ந் தேதி முதல் தமிழகத்தில் முகாம்கள் மூலம் மீசில்ஸ்,ரூபெல்லா தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.  இந்த நிலையில் இந்த ரூபெல்லா தடுப்பூசியால் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும், எனவே அந்த ஊசியை இலவசமாக போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்துகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்படுகிறன. 

இவை பல நாட்கள் கெடாமல் இருக்க, பாதரசத்தால் செய்யப்பட்டுள்ள தியோமெர்சால் (ஜிலீவீஷீனீமீக்ஷீsஷீறீ) என்னும் பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு தியோமெர்சால் ரசாயனத்தை தடுப்பு மருந்துகளில் பயன்படுத்த ஃபுட் அண்டு டிரக் அசோசியேஷன் (திஷீஷீபீ கிஸீபீ ஞிக்ஷீuரீ கிssஷீநீவீணீtவீஷீஸீ) தடை விதித்தது. 'தியோமெர்சால் ரசாயனத்தால் நரம்புக் குறைபாடு ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம், இதுகுறித்து உறுதியாகக் கூற முடியாது' என தியோமெர்சாலை தடைசெய்யும் முன்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.

யூனிசெஃபின் யுனைட்டட் நேசன் ஃபண்ட் ஃபார் பாப்புலேசன் அலிவியேஷன்(யு.என்.எஃப்.பி.ஐ) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக தீவிர தடுப்பூசி திட்டம்  அமல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராக் பெல்லர் ஃபவுண்டேஷன் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி திட்டங்களுக்கு இவ்வமைப்பு நிதியுதவி அளித்து வருகிறது. 

இந்த ஏஜன்சியின் 1968-ஆம் ஆண்டைய வருடாந்திர அறிக்கையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிர தடுப்பூசி திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

கர்ப்பமாகும் சக்தியை தடுக்கும் பல்வேறு தடுப்பூசிகளை உலகம் முழுவதும் தீவிரப்படுத்துவதற்கான அவசியம் குறித்தும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த மக்கள் தொகையை குறைப்பதே ஒரே வழி என்றும், இதற்கு தீவிர தடுப்பூசி முறை அத்தியாவசியம் என்றும் யூனிசெஃப் வெளியிட்ட ’அசைன்மெண்ட் சில்ட்ரன் யூனிவர்சல் சைல்ட் இம்யூனேசன்’ என்ற அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. கர்ப்பமாவதை தடுக்கும் ஹார்மோன்கள் கலந்து தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பல ஆய்வுகளும் தெளிவுப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கோனேரிராஜபுரம் அரசு மருத்துவர் எம்.நூருல்ஹக்கிடம் பேசினோம்... ‘’ தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ரூபெல்லா(மணல்வாரி அம்மை) என்ற நோயிற்கு எதிரான தடுப்பு ஊசி கர்ப்பிணி பெண்களுக்கு போடப்பட்டு வருகிறது.  

15 மாதக் குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி நோய்க்கும் சேர்த்து `எம்.எம்.ஆர்’ (மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா)  எனப் போடப்பட்டு வருகிறது. இந்த ஊசி ஒன்றின் விலை 900 ரூபாய் ஆகும். அதுதான் தற்போது இலவசமாக அரசு சார்பில் தட்டம்மை மற்றும் மணல்வாரி அம்மை நோய்களுக்கான தடுப்பூசி `எம்.ஆர்’ (மீசில்ஸ், ரூபெல்லா) எனப் போடப்படுகிறது. 

அரசு மருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் என்ற முறையில் நாங்கள் இந்தத் தடுப்பு ஊசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். ஆனால் எளிதில் தவறான கருத்தை வாட்ஸ்அப் மூலமாகப் பரப்பி மக்களை குழப்பம் அடையச் செய்துவிடுகிறார்கள். 

தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும், இது, தேசிய தடுப்பு ஊசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம் தடுப்பு ஊசிகள் கொடும் நோய்களுக்கு எதிராகச் செயல்படுபவை; பாதுகாப்பானவை” என்கிறார். அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட 'தியோமெர்சால் ரசாயனம்' இந்தியாவில் ஏன் தடை செய்யப்படவில்லை என அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பொதுமக்கள் இது போன்ற வாட்ஸ்அப் ஆடியோக்களால் பீதியடையாமல் இருப்பார்கள்.

தடுப்பு மருந்துகளின் வீரியம் ஒவ்வொருவரது உடலிலும் மாறுபடும். தடுப்பு மருந்துகளை மட்டுமே நம்பி இருக்காமல், அந்தந்த வயதில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்குத் தாய்மார்கள் அளிப்பதே எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள சிறந்த வழி. வதந்தியை நம்புவதா... அரசு சொல்வதை நம்புவதா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... குழந்தைகளைக் காக்கும் தடுப்பூசிகள் விஷயத்தில்கூடவா இப்படியான கருத்துக்களும் எதிர்க்கருத்துக்களும் வர வேண்டும்? இது குறித்து ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்க வேண்டியது அரசின் கடமை.


Who's Online

We have 87 guests and one member online

  • ZeettReuck