மதுரையில் தொடரும் பைப் வெடிகுண்டு நாடகம்

மதுரை கே.புதூர் காந்திபுரத்தில் ஒரு தையல் கடையில் 2 பைப் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது அங்கு பைப் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளர் அப்துல் ரகுமான் என்பவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஒத்தக்கை அப்துல்லா (வயது 43) என்பவர் வைத்துச் சென்றதாக கூறினார். மதிச்சியம் பகுதியல்  பதுங்கி இருந்த ஒத்தக்கை அப்துல்லாவையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது இச்சம்பவத்துக்கு காதர் ஷெரிப் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து  ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். 

-தினத்தந்தி ஜனவரி 27-0117

 மதுரை ஆழ்வார்புரம் மூங்கில் கடை பகுதியில் பைப் வெடிகுண்டுகள் கிடப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாய் அருகே சாக்குப்பையில் இருந்த 10 இஞ்ச் நீளம் கொண்ட 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த அப்துல்லா(42), அப்துல் ரகுமான்(43) ஆகிய இருவருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. –தினகரன் 28.1.17

கடந்த 26-1-2017 அன்று மதுரை கோ.புதூர்      காந்திபுரம் பகுதியில் காஜா பட்டன் தைக்கும் கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (42) என்பவரின் கடையில் இரண்டு வெடிகுண்டு இருப்பதாக யாரோ தகவல் சொன்னார்கள் என்று கூறி மதிச்சியம் காவல்துறை ஆய்வாளர் சாந்தி தலைமையில் கடையில்.சோதனை செய்த பின் ஒரு அடி மற்றும் ஒன்றை அடி நீளமுள்ள இரண்டு பிளாஸ்டிக் பைப்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து, அப்துல் ரகுமான். ஒத்த கை அப்துல்லாஹ், தேனிமாவட்டம்.கம்பத்தைச் சேர்ந்த  செய்யது(38) மதுரை சோலழகுபுரத்தை சேர்ந்த காதர்செரிப்(40) ஆகியோர் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று பத்திரிகை செய்தி வெளிவந்தது. (பார்க்க மேலே தந்துள்ள தினத்தந்தி செய்தி)

முதலில் காந்திபுரத்தில் கைப் பற்றப்பட்டது வெறும் பைப்புகள் மட்டுமே என்று வந்த செய்திகள் பிறகு மதுரை ஆழ்வார்புரத்தில் மூங்கில் கடை பகுதியில் பைப் வெடிகுண்டுகள் கிடப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தாகவும் அதன் அடிப்படையில் அங்குள்ள கழிவுநீர் கால்வாய் அருகே சாக்குப்பையில் இருந்த 10 இஞ்ச் நீளம் கொண்ட 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று மறுநாள் செய்திகள் வெளியிடப்பட்டன. (பார்க்க மேலே தரப்பட்டுள்ள தினகரன் செய்தி)

 துணை ஆணையாளர் அருண் சக்திகுமார் தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதி காரிகள் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகின்றனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

உண்மையில் பைப் குண்டுகள் கைப்பற்றப்பட்டதா?

உண்மையில் காவல்துறையினர் பைப் குண்டுகளை கைப் பற்றி னார்களா? அப்படியானால் அவற்றை  ஊடகவியலாளர்கள் முன் காட்டாதது ஏன்? மதுரை வண்டியூர் கண்மாயில் இந்த பைப் குண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்தோம் என்றும் போலீசார் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அச்செய்தி எவ்வித புகைப்பட ஆதாரத்துடனும் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படவில்லையே ஏன்?. இந்த ‘பைப் வெடிகுண்டுகள்’ உண்மையான பின்னணி என்ன என்று நாம் விசாரித்த போது திடுக்கிடும்  தகவல் தெரியவந்தது.

ஒத்த கை அப்துல்லா என்பவரை காவல்துறையினர் தமது வாகனத்தில் அழைத்து வந்து அப்துல் ரஹ்மானுடைய காஜா பட்டன் கடையில் நிறுத்துகின்றனர். பிறகு ஆய்வாளர் மட்டும் அந்த கடைக்குச் சென்று அப்துல்லா அளித்த பையை தருமாறு கேட்க அந்தப் பையை அப்துல் ரஹ்மான் எடுத்துக் கொடுக்கிறார். இதுவே பைப் வெடிகுண்டாக மாறுகின்றது.  அப்துல்லாஹ்வும் அப்துல் ரஹ்மானும் முஸ்லிம் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக பிரச் சாரத்தில் ஈடுபட்டது குறிப் பிடத் தக்கது.

மருத்துவர் ராமதாஸ்

 28.1.2017 அன்று பழனிபாபா நினைவு நாள். இதையொட்டி மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  பேசுவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இம் மாநாட்டை தடுக்க செய்த சதி யாகவும் இந்த பைப் வெடி குண்டு நாடகத்தை மதுரை காவல்துறையினர் மீண்டும் அரங்கேற்றியிருக்கலாம் என்று மதுரைவாசிகள் பரவலாக கருதுகின்றார்கள்.  ‘வெடிகுண்டு’ சம்பவத்திற்கு பிறகு மருத்துவர் ராமதாஸ் பங்கு கொள்ளவிருந்த மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண் டில் மட்டுமே ஐந்து முறை போலி வெடிக்காத குண்டுகள் மதுரையில் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்கதையாக மதுரையில் நீடித்து வருகின்றது.

மதுரையில் காவல்துறையின் ஒரு பகுதியினர் இது போன்ற போலி குற்றங்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கி வருகின்றனர் என்று சில ஆண்டு-களுக்கு முன்பு மதுரை ஊரக காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் அவர்களது அறிக்கை தான் மதுரையில் பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படும் போ தெல்லாம் நினைவுக்கு வருகின்-றது. அப்துல்லாஹ்வும் அப்துல் ரஹ்மானும் முஸ்லிம் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 -நமது நிருபர்


Who's Online

We have 88 guests and one member online

  • ZeettReuck