உலகின் வேறெந்த நாட்டிலும் இப்படி கேவலம் நடக்குமா? என்று தெரியவில்லை. தமிழக விவசாயிகள் தலை நகரம் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் 15நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.

அவர்கள் நடத்தும் வாழ்வுரிமைப் போராட்டம். மதவெறி தவிர வேறெதுவும் அறியாத மத்திய அரசுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதுவரை அவர்களை அழைத்துப் பேசவில்லை. இப்படி இருப்பதற்காக இந்த இறுமாப்பு கொண்ட அரசு கூசவில்லை.


என்ன கேட்கிறார்கள் தமிழக விவசாயிகள்? மோடி போல 10லட்ச ரூபாய்க்குக் கோட்டு சூட்டு போட கோரிக்கை வைக்கிறார்களா? பல நாடுகளுக்கும் அரசு செலவில் பறப்பதற்காக ஆளாய்ப் பறக்கிறார்களா? விவசாயத் தொழிலுக்குக் குறைந்த பட்ச லாப உத்தரவாதத்தையாவது கேட்கிறார்களா? இல்லை.


காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி அமைக்க வேண்டும். 100ஆண்டுகளில் காணாத வறட்சியைத் தமிழகம் கண்டுள்ளது. எனவே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட மிக மிக நியாயமான கோரிக்கைகளையே அவர்கள் முன் வைத்துள்ளனர்.


ஆனால் அயோக்கியத் தனத்தின் ஒட்டு மொத்த வடிவாகி இருக்கும் மோடி அரசாங்கம். நமது விவசாயிகளை முதுகில் குத்தி சாகடிக்கப் பார்க்கிறது. போராட்டத்தின் ஏழாவது நாளில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்காரார்களை சந்தித்து,‘‘எல்லோரும் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள், அரசிடம் பேசி, கோரிக்கைகளை ஏற்கச் செய்கிறேன்’’என்று வாக்களித்துள்ளார்.


தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திய விவசாயிகள் தமிழகத்திற்குத் திரும்பாமல் டெல்லியிலேயே தங்கி இருந்தனர். பொன்னாரின் வாக்குறுதி பொய்யில் புழுத்தது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயிகள் மீண்டும் நாடாளுமன்ற வீதியில் விநோதமான வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


தங்களின் வாழ்வாதாராத்தற்காகப் போராடும் விவசாயப் பெருங்குடி மக்களை இவ்வளவு கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் நடத்துவதற்கு அசாதியமான குரூரம் கொண்ட மனம் வேண்டும். அது மோடி அரசுக்கு இருக்கிறது.


நெடுவாசல் போராட்டத்தை 22 நாட் களுக்குப் பிறகு பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகிய மத்திய அமைச்சர்கள் மூலம்,வஞ்சகமாகப் பேசி பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு, இப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தனியாரிடம் ஒப்பந்தம் போட்டது போல. விவசாயிகளையும் வஞ்சிக்கப் பார்க்கிறது. விஷப் பற்களைக் கொண்ட மோடி அரசாங்கம்.
தங்களின் கோரிக்கை வெல்லும் வரை தமிழகத்திற்கே திரும்ப மாட்டோம் என உறுதிபடக் கூறி போராட்டக்களத்தில் நிற்கின்றனர் தமிழக விவசாயிகள். காவிரி விவகாரத்தில் காவி அரசின் கயவாளித்தனத்தால் முற்றிலும் விவசாயம் முடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 250 விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலையாலும் செத்து மடிந்துள்ளனர். அவர்களது குடும்பம் கதறி நிற்கிறது.


காவிகளின் ஈரமற்ற கண்களுக்கு இது தெரியவில்லை போலும் ஒட்டு மொத்த தமிழக மக்களும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரண்டு தமிழக விவசாயத்தைப் புதைக்கப் பார்க்கும் மோடி அரசின் மூர்க்கத் தனத்திற்கு முடிவுகட்ட வேண்டிய கட்டம் உருவாகியுள்ளது.


தமிழகம் எழட்டும். மக்கள் விரோத மத்திய அரசு விழட்டும், விவசாயி களின் போராட்டம் வெல்லட்டும்.

 


Who's Online

We have 96 guests and one member online

  • ZeettReuck