தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பகுதி.

ஒருவர் இல்ல நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதைப்போன்று ஆர்வமாக கலந்து கொண்டு சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வந்த பகுதி.


இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஒற்றுமையை விரும்பும் அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது. தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஓடி வளம் கொழிக்கும் பகுதியாக இருந்த பகுதியில் முதலில் விவசாயிகளின் ஒற்றுமையை குலைக்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்தப் பகுதியில் 20 ஜிஎம்டி திட்டம் மூலம் ஆலைகளுக்கு நீர் பெற்று வந்த பெருமுதலாளிகள் தங்களின் தரகர்கள் மூலம், சாதிய நெருப்பைத் தூண்டி விட்டு அந்தப் பகுதியில் அடிக்கடி படுகொலைகள், இளைஞர்கள் இடையே முட்டல் மோதல் என சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் பகுதியாக மாறிவந்துள்ளது.


தாமிரபரணியில் மணல் எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தடை உத்தரவு இட்டிருந்த நிலையில் மணல்கொள்ளையர்கள் அரசியல் பின்புலத்துடன் தங்களின் மணல் வியாபாரத்திற்கு தடையாக இருந்தவர்களை சாதியின் பெயரால் அச்சுறுத்துவது, தாக்குவது என மறைமுகமாக தங்களின் ராஜ்யத்தை நடத்தி வருகின்றனர்.


மணற்கொள்ளைக்கு எதிராக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தாண்டி தங்கள் எல்கைகளை விரிவுபடுத்த முடியாமல் இருந்த மதவெறி பாஜக கும்பல் மணற்கொள்ளையர்களின் ஆதரவுடன் இந்தப் பகுதிகளில் பல்வேறு குழுக்கள் இடையே மத துவேஷத்தை பரப்பி வந்தனர்.


அதன் நீட்சியாக செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மதில் சுவர்க்கட்டுவதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கடந்த 2000 ஆண்டு முதல் பல சுற்று பேச்சுவார்த்தை வருவாய் மற்றும் காவல்துறையின் முன்னிலையில் நடைபெற்று கோவிலை சுற்றி உள்ள ஆறு சென்ட் நில எல்கைக்குள் கோவில் தரப்பினர் சுற்றுச்சுவர் கட்டிக்கொள்வது என முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


நிலைமை இவ்வளவு சுமூகமாக சீரடைவதை விரும்பாத பாஜக கும்பல் கடந்த வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியைத் தாண்டி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக கோவில் கமிட்டி பெயரில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து உள்ளது.


அந்த ஊரைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியைத் தாண்டி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தங்களின் நடமாட்டம் குறிப்பாக அடக்கஸ்தலத்திற்கு செல்லும் பாதை தடைபடும் இதனால் எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என காவல்துறைக்கு புகார் செய்துள்ளனர்.


துரிதமாக செயல் படவேண்டிய காவல்துறை மிகவும் அலட்சியப் போக்குடன் இந்த பிரச்சனையை அணுகியதன் காரணமாக இஸ்லாமியர்கள் வீடுகள் மற்றும் இளைஞர்கள் மீது கோவில் கமிட்டி பெயரில் ஊருக்குள் நுழைந்த வெளியூர் சங்கிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஹம்மது யூசுப் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மமக செயலாளர் பக்கீர் மைதீன், முன்னாள் மாவட்ட செயலாளர் பீரப்பா ஆகியோர் ஊர் ஜமாத்தினர், சகோதர அமைப்பினர் உடன் அமர்ந்து கலந்து பேசியதுடன் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு நிலைமையை சீரடைய செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.


மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காவல்துறை தலைமையகத்தை தொடர்பு கொண்டு கலவரத்தை தூண்டும் சங்கபரிவார் கும்பல் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.


தற்போது அந்தப் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. காவல்துறை துண்டு பிரசுரம் விநியோகிக்க பட்டபோதே செயல்பட்டு இருந்தால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்த்து இருக்க முடியும். இந்த சம்பவத்திற்கு காரணமான சங்க பரிவார் கும்பல் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும்.


மேலும் முஸ்லிம் இளைஞர்களும் பாசிச கும்பலின் பல்வேறு வடிவிலான சூழ்ச்சிகளை புரிந்து உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் அறிவுபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்.

செய்துங்கநல்லூரில் வன்முறை - தமுமுக துணை தலைவர் நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில் நடைப்பெற்ற வன்முறை சம்பவம் குறித்து கடந்த மார்ச் 28 அன்று தமுமுக துணை தலைவர் மௌலவி யி.ஷி.ரிபாயீ ரஷாதி நேரில் சென்று பார்வையிட்டனர். செய்துங்கநல்லூர் ஜமாத்தார்கள், மற்றும் ப.ம.க துணை தலைவர் கசாலி, தேவர் சமுகத்தை சார்ந்தவர்கள், தேவேந்திர சமுகத்தை சார்ந்தவர்கள் அரசியல் கட்சி பிரமுகர், சந்தித்து சம்பவங்களை கேட்டுஅறிந்தர் பின்பு அவர்கள் மத்தியில் பேசினார்.


அனைவரும் ஓற்றுமையாக இருக்கவும்,அண்ணன்,தம்பிகளாக வாழ்த்துவரும் நம் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை தலைதுக்க விடமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.


அவர்களுடன் தமுமுக ஊடக பிரிவின் மாநில செயலாளர் மி.உஸ்மான் கான் அவர்கள், தூத்துக்குடி தெற்கு தமுமுக மாவட்ட செயலாளர் கி.யூசுப் மற்றும் தமுமுக & மமக நிர்வாகிகள், நெல்லை கிழக்கு பொறுப்புகுழு உறுப்பினர் நாமியா ஷி.அசன்மைதீன் ஆகியோர் உடன் சென்றுயிருந்தனர்.


Who's Online

We have 54 guests and no members online