அமெரிக்காவின் தணியாத வெறுப்புணர்வு: மன்னிப்பு கேட்டது டெய்லி மிரர்

இன்றும்  உலக அளவில் நாகரிகம் , சகோதரத்துவம்  , உரிமைகள் குறித்த முழக்கங்கள் உச்சாணி கொம்பில்   இருப்பதாக மார்தட்டப்படுகிறது. நாகரீகத்தில் நனி  சிறந்த  சிறப்பிடம் பெற்றுள்ளோம் என்று கூறப்பட்டாலும் நிறவெறி ,இனவெறி  ,ஆதிக்க  வெறி   போன்றவை உளஅளவில்  உலக மக்களில்  குறிப்பாக  மேற்குலக  மக்களாலும்   வெறித்தனமாக அது பின்பற்றப்படுகிறது  என்பது  தான் வேதனை. அண்மையில்  டெய்லி மெயில் என்ற பிரிட்டன்  பத்திரிகையில், அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவான டிஸ்னீ லேன்டிற்கு செல்ல முற்பட்ட முஸ்லிம் குடும்பம் ஒன்றை அல்-கொய்தா இயக்கத்தை சேத்ர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தங்கள் நோக்கத்தை மறைத்து பொய் கூறுகின்றனர் என்றும் கூறி கட்டுரை ஒன்று வெளியானது. இந்த கட்டுரையை கேட்டீ ஹாப்கின்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.

வக்கிர புத்தி படைத்தோர்  அங்கும் ஊடகத்துறையில்  ஊடுருவியுள்ளனர் என் பதை இது  காட்டுகிறது..அள்ளித்தெளிக்கும் அவதூறு சேற்றினால்  ஒரு சமூகத்தையே   களங்கப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு கிஞ்சித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுவதில்லை இது அந்த நாட்டில்   மிகப்பெரிய பிரளயத்தினை   ஏற்படுத்தியதை தொடர்ந்து. தற்போது இந்த செய்தி குறித்து வருத்தம் தெரிவித்ததோடு அந்த குடும்பத்திற்கு 15 லட்சம் பவுண்டுகளை அபராதமாக செலுத்தியுள்ளது டெய்லி மெயில் பத்திரிக்கை.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிட்டன் முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்களின் குழந்தைகளின் விடுமுறை நாட்களை அவர்களுக்கு விருப்பமான முறையில் செலவிட அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்டிற்கு செல்ல இருந்தது. ஆனால் அவர்கள் அமெரிக்க விமான நிலையத்தில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் தடுக்கப்பட்டனர். இது குறித்த செய்தியை டெய்லி மெயில் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதிய கேட்டீ ஹாப்கின்ஸ் இந்த குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல விடாமல் தடுக்கப்பட்டது சரிதான் என்றும் (இவர்களை பயணம் செய்ய அனுமதித்த) இங்கிலாந்தின் எல்லைப்பாதுகாப்பு மோசமாக இருப்பதால் இவர்களை அமெரிக்கா செல்ல விடாமல் தடுக்கும் அமெரிக்காவின் எல்லைப்பாதுகாப்பை எப்படி குறை கூற முடியும் என்றும் “நானாக இருந்தாலும் அவர்களை அனுமதித்திருக்க மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் லண்டனில் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் இடத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்களை 2015 டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான கட்டுரையில் அவர் எழுதியிருந்தார். பின்னர் 2015 டிசம்பர் 29 இல் வெளியான மற்றொரு கட்டுரையில் மீண்டும் அவர்களை குறை கூறி கருத்துகளை பதிந்திருந்தார்.

 இதனை அடுத்து இந்த செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது தாங்கள் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்தும் அந்த செய்தியினால் பாதிக்கப்பட்ட மஹ்மூதின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக்கோரியும் செய்தி வெளியிட்டுள்ளது டெய்லி மெயில்.

அதில், “தாரிக் மஹ்மூத் மற்றும் சாஹித் மஹ்மூத் ஆகியோர் பயங்கரவாதிகள் இல்லை என்றும் அவர்களுக்கு அல்-கொய்தா இயக்கத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள அவர்களது சகோதரர் ஒருவரை காண அமெரிக்கா சென்றனர். மேலும் டிஸ்னீ லேண்ட் செல்வதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற  ஒருவரின்   கயமைத்தனத்தால்  எவ்வளவு இடையூறுகள்  பாருங்கள் “ஹம்ஸா, தயீபா, ஹஃப்ஸா மஹ்மூத் ஆகியோருக்கும் பயங் கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நாங்களும் கேட்டீ ஹாப்கின்ஸும் மஹ்மூத் குடும்பத்தினரிடம் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் மன்னிப்புக் கோருகிறோம். மேலும் அதற்கான நஷ்டயீட்டையும் அவர்களது வழக்கு செலவுகளையும் நாங்கள் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹ்மூத் குடும்பத்தின் சட்ட நிறுவனமான கார்டர் ரக், “டெய்லி மெயில் தற்போது ஒப்புக்கொண்டது போல அவர்கள் கூறிய அனைத்தும் பொய்யானவை. மஹ்மூத் குடும்பத்தை தீவிரவாதிகளுடன் ஒப்பிட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவர்கள் விடுமுறைக்காக அமெரிக்க சென்றார்கள்” என்று கூறியுள்ளது. மேலும், “தங்களது கூற்றை மெய்ப்பிக்க டெய்லி மெயிலோ அல்லது கேட்டீ ஹாப்கின்ஸோ எந்த ஒரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வில்லை.” என்று கூறியுள்ளது.

இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட மஹ்மூத் குடும்பம் சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய தாரிக் மற்றும் சாஹித் மஹ்மூத், “பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டெய்லி மெயில் மற்றும் கேட்டீ ஹாப்கின்ஸ் தாங்கள் வெளியிட்ட செய்தி தவறானது என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.”

“ஆனால் இந்த நாள் வரை அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் ஏன் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை. அது அவர்கள் தரப்பில் ஏற்பட்ட தவறு என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் ஏற்க்கனவே குறிப்பிட்ட படி  வெறியை  தலை  முழுவதும் நிறைத்து வைத்துக்கொண்டு இருப்பவர்களால்  எவ்வாறு நியாயமாகவும்  பொறுப்புணர்வுடன்   நடந்து கொள்ளமுடியும்   இதில்   உலகின் ஆக சிறந்த சனநாயக நாடு என்று  பெருமை  பீற்றல் வேறு. இது  விஷயத்தில்   தண்டிக்கப்படாத  நிலையை நினைத்தால் அந்த அரசு கட்டுக்கோப்பின் மீது ஆத்திரமும்  பரிதாபமும் ஏற்படுகிறதல்லவா?  சரி சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதிலளிப்பார்களா ? தொடர்ந்து வாசியுங்கள்  

அமெரிக்காவின் வளர்ச்சியின் அடையாளமாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் திகழ்வது ’ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி’ என்றழைக்கப்படும் சுதந்திர தேவி சிலை. இச்சிலையில் பெண் உருவமாக இருப்பது எகிப்தைச் சார்ந்த முஸ்லிம் பெண் விவசாயி என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் ’த டெய்லி பீஸ்ட்’ என்ற பத்திரிகையில் ’மைக்கேல் டேலி’ என்பவர் இது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். 19-ஆம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,இது சுகந்திர தேவி சிலை அமெரிக்கைவின் நியூயார்க் நகரின் துறைமுக நுழைவு வாயிலில் உள்ளது.

சூயஸ் கால்வாயின் நுழைவு வாயிலில் இச்சிலையை நிறுவ விரும்பியே இச்சிலையை வடிவமைத்த பிரெடரிக் ஆகுஸ்டே பார்த்தோல்டி இச்சிலையின் சித்திரத்தை வரைந்தார்.எகிப்திய விவசாய பெண்ணொருவர் விளக்கை உயர்த்திப்பிடித்துக்கொண்டு நிற்கும் நிலையில் இச்சித்திரம் வரையப்பட்டது.ஒரே நேரத்தில் வளர்ச்சியின் சின்னமாகவும், வெளிச்சத்தையும் தரும் கலங்கரை விளக்கமாக அதனை அவர் சித்தரித்திருந்தார்.ஆனால், அக்காலத்தில் எகிப்திய ஆளுநரான இஸ்மாயீல் பாஷா இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை கைவிட்ட பிரெடரிக் பின்னர் அமெரிக்காவிற்கு சென்றார்.

முதலில் மன்ஹாட்டனில் அல்லது செண்ட்ரல் பார்க்கில் இச்சிலையை நிறுவ அவர் விரும்பினார்.பின்னர் அவர் இன்று லிபர்டி தீவு என்றழைக்கப்படும் பெல்தே தீவை சிலையை நிறுவும் இடமாக தேர்வுச் செய்தார்.முஸ்லிம் பெண்ணை ‘லேடி லிபர்டி’ என்றழைத்ததோடு, எகிப்திய விவசாய பெண் அமெரிக்காவின் சுதந்திர சின்னமாகவும் மாறினார்.அமெரிக்காவில் நுழைபவர்களை வரவேற்கும் தோரணியில் நிற்கும் இச்சிலையை கொண்டாடுபவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது  முஸ்லிம்கள் என்றாலே முகம் சுளிப்பது ஆசிய ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக  குறிப்பாக முஸ்லிம்களுக்கு, இன்னும் குறிப்பாக அரபுகளுக்கும், இன்னும் குறிப்பாக  கூறவேண்டுமெனில் அரபுலக அகதிகளுக்கு  எதிராக துவேசத்தை பரப்புரைச் செய்யும்   வினோதமான ஒன்றாகவே  கருத முடியும். துவேஷம்  தொடர்கதையாகவே  தொடர்வதை  நாம்  பார்க்கமுடியும். 

நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது..

வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.

இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்னஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா. செய்தான் அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.

மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்னஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.

ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டார்..மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.

தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத்தண்டனை அடைந்தான்.  சரி  இத்தகைய  அவமானங்களை  உயிர் அச்சுறுத்தல்களை  எதிர்கொள்ள மேற்குலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரே நீதிமன்றத்தின்  நெடிய படிக்கட்டுகளை கடந்து  நீதியின் கதவுகளை  தட்டி வந்த கதை  உங்களுக்கும் தெரியாததல்ல. இந்தியப் பிரமுகர்கள் அமெரிக் கர்களால் அவமானப்படுத்தப்பட்டு வருவது சீசனாகவும், ஃபேஷனாகவும் மாறிவரும் நிலையில், தன்னை அவ மானப் படுத்தியவர்களை சட்டரீதியாக சந்தித்து தண்டனை வாங்கிக் கொடுத்த ஒரு பெருமகனைக் குறித்து இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஒரு காலத்தில் கேட் ஸ்டீவன்ஸ் என அழைக்கப்பட்டு பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட யூசுப் இஸ்லாம் குறித்து பிரிட்டனின் சன் செய்தி ஏடு கடுமையான களங்கத்தை சுமத்தியது.

யூசுப் இஸ்லாத்திற்கு தீவிரவாதத் தொடர்பு உண்டு என சிறிதும் பொறுப் பற்ற முறையில் அந்தப் பத்திரிகை எழுதியதை எதிர்த்து சட்ட யுத்தத் தினை துவங்கினார் யூசுப் இஸ்லாம். ஆம், சன் பத்திரிகையின் மீது வழக்கு தொடர்ந்தார். பல மாதங்கள் கழித்து யூசுப் இஸ்லாம் மீது களங்கம் சுமத்தி யதற்காக சன் பத்திரிகைக்கு கடுமை யான கண்டனம் தெரிவிக்கப்பட்ட தோடு, மன உளைச்சலுக்கு உள்ளான யூசுப் இஸ்லாமுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது. யூசுப் இஸ்லாம் வெற்றி வீரராக உலாவந்தார். இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த தொகையை சுனாமியால் சூறையாடப்பட்ட இந்தோனேஷியா வின் அஷே பகுதி மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.தனது தன்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்திய சக்திகளை மன்னிப்புக் கேட்க வைத்தார். 

ஆனால் நம் பிர பலங்கள் வீராவேசமாக செய்தியாளர் களிடம் பேசுவதோடு கப்சிப் ஆகிவிடு கிறார்கள்.தரம் குறைந்த செயலைச் செய்தவர் களுக்கு தகுந்த தண்டனை அமெரிக்கா விலும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலும் இச்செயலுக்கான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களை பிடித்தாட்டும் இஸ்லாம்ஃபோபியா குறித்து திரையு லகப் புள்ளிகள்தான் வாய்திறந்தார் களே தவிர, வேறு யாரும் திறக்க வில்லை. ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்பதால்தான் அவமானப் படுத்தப்பட்டேன் என்று கூறியதை (வெளிநாட்டு ஊடகங்களைத் தவிர) இந்தியப் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. இதுபோன்ற கண்டுகொள்ளா நிலைக்கு விடை கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த அவமானங்கள் அந்த அவமானச் சின்னங்களால் நேராமல் இருக்கும்

 அமெரிக்க அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பிரபலங்கள் அவமதிக்கப் படுவது வாடிக்கையாகி வருகிறது.

தங்கள் நாட்டில் நுழைவதற்கு முன்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என அமெரிக்க அதிகார வர்க்கம் மனிதர் களின் தகுதி அறியாது தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள் வது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்திய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்கிய வரும் இந்திய ஏவுகணை இயலின் வித்தகரும் இந்திய அணு விஞ்ஞானத் தின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய மண்ணிலேயே அமெரிக்க அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டார். அவரது காலணி)று) களையும், காலுறைகளையும் கழற்றி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் கண்டனங் கள் எழுந்தன. ஆனால் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அவரது பெயர்தான் அவரை சோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டது என்பதை யாரும் அப்போது சுட்டிக் காட்டவில்லை.

ஒபாமாக்கள் என்னதான் இஸ்லாமிய உலகில் சென்று 'அஸ்ஸலாமு அலைக் கும்' என்று கூறி தன் நாட்டின் தவறு களுக்காக தன்னிலை விளக்கம் அளித் தாலும், ஒவ்வொரு மில்லி மீட்டரி லும் பரவி இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி துவேஷங்களை அடியோடு அழிக்க சூளுரைக்க வேண்டும்.. தனது கடந்தகால தவறு களிலிருந்து அமேரிக்கா  பாடம் கற்குமா ? ட்ரம்ப்   அமெரிக்கா   எப்படி  இருக்கும்   பொறுத்து இருந்துதான்   பார்க்கவேண்டும்.


Who's Online

We have 59 guests and no members online