துருக்கிக்கான ரஷ்யாவின் தூதுவர் என்றி கர்லோவ் மீது  துருக்கி, அங்காராவில் துப்பாக்கி சூடு  நடத்தப்பட்டு  அவர் கொல்லப்பட்டார். 

அங்காராவில் இடம்பெற்றுவரும் புகைப்படக் கண்காட்சி யொன்றில் அவர் பங்கேற்ற  போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர் படுகாய மடைந்து  பின்னர் உயிரிழந்தார். 

இம்மாதம்  கஸகஸ்தானில் நடை பெறவுள்ள சிரியா விவகாரம் தொடர்பான மூன்று   தலைவர்கள்  மாநாட்டை குழப்புவதற்காகவும், அண்மைக்காலமாக துருக்கிக்கும், ரஷ்யாவுக்குமிடையில் உள்ள ராஜதந்திர நட்புறவை சிதைத்து  சிரியா பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் நோக்கத்தோடும் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ராஜதந்திரிகள்   தெரிவிக்கின்றனர். இத்தாக்குதல் இடம்பெற்ற இடத்தில், தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சப்தங்கள் கேட்டதாகவும்,காவல் அதிகாரி போன்று நடித்த ஒருவரே தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும், இத்தாக்குதலில் இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.“நாம் அலெப்போவில் மரணிக்கின்றோம், நீ இங்கு மரணித்துப் போ” “உன்னை கொல்லும்வரை நான் மரணிக்க மாட்டேன்” என்ற வாசகங்களை சுட்டவர்  கூறியிருந்ததாகவும் , துருக்கி காவல்துறையினர்  அவரை  சுட்டுக் கொன்றுள்ளதாகவும்  முதல் கட்ட தகவல் தெரிவித்தன. துப்பாக்கி சூட்டை நடாத்திய நபர் , குலன் இயக்கத்தை சேர்ந்தவர் என தெரிய   வந்துள்ளது. , இது சம்பந்தமாக  துருக்கிய அதிபர் அர்துகானுக்கும்- ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினுக்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றதில், இது ரஷ்ய-துருக்கி உறவில் விரிசலை ஏற்படுத்த திட்டமிட்டு இடம்பெற்ற சதி என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, எவ்வித சூழ்நிலைகள் வரினும், ரஷ்ய-துருக்கி ராஜதந்திர உறவு பேணப்படும் என அர்துகான் உறுதி   பட   தெரிவித்து  இருப்பதாக துருக்கிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியா விவகாரம் தொடர்பாக இடம்பெற இருக்கும் ரஷ்யா-ஈரான்-துருக்கி முத்தலைவர் மாநாடு மற்றும்  ரஷ்யாவில் மூன்று நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்திப்பதில் எவ்வித பின்னடைவும்    ஏற்படாது என இருதரப்பிலும்   நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூதுவர்  படுகொலை    போன்ற செயல்கள் உலக அளவில்   அவப் பெயரை ஏற்படுத்தவே  செய்யும் என்பதில்  ஐயமில்லை.   


Who's Online

We have 54 guests and no members online