ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும்நாடுகளின் தூதுவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் இஸ்ரேலிய குடியிருப்புப் பணிகளை நிறுத்தக் கோரி கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து நெதன்யாஹூ கோபமாக இருக்கிறார். பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் வரவழைக்கப்பட. உள்ளவர்களில் அடங்குவர்.

டெல் அவிவில் உள்ள அமெரிக்க பிரதிநிதி அழைக்கப்பட மாட்டார். இஸ்ரேலின் முக்கிய ஆதரவு நாடான அமெரிக்கா தனது வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்ததைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Who's Online

We have 46 guests and no members online