உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனில்  பாலஸ்தீன  தூதரகம் திறக்கப்பட்டது. 

இதனை பாலஸ்தீன அதிபர்  மஹ்மூது அப்பாஸ் திறந்து வைத்தார். திறப்பு நிகழ்வுக்குமுன்னதாக பாப்பரசர் பிரான்சிஸ்ஐ சந்தித்து உலகின் சமாதான முன் முயற்சிகள்  குறித்தும் பயங்கரவாதத்தை ஒன்று  பட்டு முறியடிப்பது குறித்தும் நீண்ட ஆலோசனை  நடத்தியதாகவும் அப்பாஸ்   தெரிவித்தார்.

வாடிகன் 2005 ம் ஆண்டே  பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாரீசில் நடைபெறும்  சர்வதேச அமைதி மாநாட்டில் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புகளுக்குஎதிரான ஐக்கிய நாடுகள் அவையின் 2,334  ம் தீர்மானம் நிறைவேற்றப்படும்  என  தாம்  நம்புவதாகவும் தெரிவித்தார். பாலஸ்தீனத்தை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க  வேண்டும்   என  உலக நாடுகளை அப்பாஸ் கேட்டுகொண்டார். 

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டோனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருஸலத்திற்கு மாற்றப்போவதாக அறிவித்த நிலையில் வாடிகனில் பாலஸ்தீனத்தின் தூதரகம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து கருத்து தெரிவித்த அப்பாஸ் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அது நடைபெற்றால் அது அமைதிக்கு வழிவகுக்காது. அது நடக்காது என்றே எதிர்பார்க்கிறோம் என்றார்.


Who's Online

We have 39 guests and no members online