அமெரிக்க மக்களவைக்கு இல்ஹான் உமர் என்ற முஸ்லிம் பெண்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்க வரலாற்றில் ஒரு முஸ்லிம் பெண், மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. மின்னசோட்டா மாநிலத்தில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் சோமாலியாவில் பிறந்தவர். 

கடந்த வாரம் திருக்குர்ஆனை கையில் ஏந்திய வண்ணம் இவர் மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். திருக்குர்ஆனை கையில் ஏந்தி பதவிப் பிரமாணம் செய்து  கொண்ட இரண்டாவது முஸ்லிம் உறுப்பினராவார் இவர். இவருக்கு முன்பு கீத் எலிசன் என்ற உறுப்பினர் திருக்குர்ஆனை கையில் பிடித்த வண்ணம் பதவி ஏற்றுக் கொண்டார்.

அகதியாக  கென்யா  அகதிகள் முகாமில் நான்கு ஆண்டுகள்  கழித்தவர். 12ம் வயதில் அமெரிக்காவில்  அகதி  சிறுமியாக அடியெடுத்து வைத்தவர். தனது கடின உழைப்பாலும் அறிவார்ந்த முயற்சியாலும்  உயர்ந்தவர். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக வளர்ச்சியை முன் நிறுத்தி வாகை சூடினார். அதுவரை அவர் சந்தித்த பொருளாதார  சமநிலையற்ற நிலையும் சகிப்புத்தன்மையற்ற மத வாத  உணர்வுகளும்  அமெரிக்கர்களிடையே வெளிப் பட்டு  வந்த நிலையிலும்  அதனை எதிர்கொண்டு தான் வென்றதாக குறிப்பிடுகிறார். அனைத்துமக்களுக்கும் நீதி கிடைக்க  தொடர்ந்து பாடுபடப்போவதாக  கூறுகிறார். 

எம் நாட்டின்  ஜனநாயகம்   உயர்ந்தது   இந்த ஜனநாயக பூமியில் வளர்ச்சி  மற்றும் சமத்துவத்திற்கான   கடமையை  தொடர்ந்து ஆற்றுவோம்  என்றார்  இல்ஹான் உமர்.  மூன்று குழந்தைகளுக்கு தாயாரான இல்ஹான்,  குற்றவியல் சட்ட  சீர்திருத்தம் , பொருளாதார சமத்துவம் , தூய்மை சக்தி  போன்றவற்றை வென்றெடுக்க   பாடுபடப்போவதாக கூறுகிறார்.  18 வயதை அடைந்துவிட்டா லோ   அல்லது ஓட்டுநர்  உரிமம் பெற்றுவிட்டால்  தானாகவே ஓட்டு உரிமை   பெரும் அளவுக்கு ஒரு புதிய சட்ட முன்வரைவை  தாம் அறிமுகப்   படுத்தப்போவதாகவும் கூறுகிறார்.  ஆப்பிரிக்காவில்  ஒரு பின்தங்கிய நாட்டில்  பிறந்து இன்று அமெரிக்காவின் சட்டமியற்றும்  அவையில் மக்கள் பிரதிநிதியாக பங்கு பொறுப்பேற்கும், 31 வயதேயான   இல்ஹான்  உமரை வாழ்த்துவோம்.


Who's Online

We have 49 guests and no members online