இந்தியா உலகின் முன்னணி ஜனநாயக நாடு  அமெரிக்கா  உலகில் எங்கு ஜனநாயகம்  பாதிக்கப்பாட்டாலும்  பறந்து சென்று அங்கு ஜனநாயகம் தழைக்க பாடுபடுவதாக கூறிக்கொள்ளும்.  இந்த இருநாட்டிலும் ஜனநாயகத்தை  தம்  விருப்பத்துக்கு வளைத்து நாட்டின் உச்சாணிப் பதவியை பிடித்த இருவருக்கும், ஜனநாயக கோட்பாட்டில்  மக்களாட்சி தத்துவத்தில்   கடுகளவு   கூட நம்பிக்கை  இல்லாத அரசியல் வாதிகள் இவர்கள் .இந்திய ட்ரம்ப் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அமெரிக்க மோடி என்பவர் டொனால்ட் ட்ரம்ப் .மோடி; இந்திய பிரதமர் மோடி,  அதானி   உள்ளிட்ட பண முதலைகளின்  உற்ற தோழர்

ட்ரம்ப்;   டொனால்டு  ட்ரம்ப்  முதலைகளுக்கு நண்பர் மட்டுமல்ல  அவரே   முன்னணி   முதலை தான்

மோடி;   இந்தியாவின்   ஒடுக்கப்பட்ட  சமூகங்களுக்கு எதிராக வெறுப்பரசியல் செய்து   பரபரப்பு  பரப்புரையால் பேசப்பட்டார்.

ட்ரம்ப்;  அமெரிக்காவின் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவும்  உலகளவில்  அகதிகள் மற்றும் முன்னேறத்துடிக்கும் மூன்றாம் உலக நாடுகளான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக எதிர் அரசியல் செய்வதை கொள்கை பிரகடனமாகவே  முழங்குபவர்.

மோடி;   மோடிக்கும் முஸ்லிம்கள்  கிறிஸ்தவர்கள் , பழங்குடியினர்   தமிழர்கள்  காஷ்மீரிகள்  உள்ளிட்ட தனித்த அடையாளங்கள்  பாரம்பரிய பெருமை கொண்ட  சமூக மக்களை அவ்வளவாக பிடிக்காது. இருப்பினும்    வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாதாகையால் தமிழகம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அரச பயங்கரவாத கெடுபிடியை ஏவுகிறார். வெறுப்புணர்வு  பிரச்சாரத்திற்கு சாத்வி  பிராச்சி  யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட சங்பரிவார் குலவிளக்குகளை  (!)  பயன்படுத்துகிறார். பெரும்பான்மை  வாதம் பேசும் இருவருமே   பெரும்பான்மை வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.

மோடி; இந்திய பிரதமர் மோடி  வெறும் 31 சதவீத வாக்குகளை பெற்றே பிரதமராகியுள்ளார். மீதம் 69 சதவீத வாக்காளர்கள் மோடிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். குறிப்பாக உபி, பிகார்,  குஜராத், மராட்டியம், கர்நாடகா மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்   உள்ளிட்ட சில மாநிலங்களை  தவிர(ஆந்திரா, அஸ்ஸாம்  போன்ற மாநிலங்களில் கூட்டணி பலத்தில் சில இடங்களை  வென்றதை தவிர) பெரும்பாலான மாநிலங்களில் மோடிக்கு  ஆதரவான  அலை வீசவேயில்லை.

ட்ரம்ப்;   அமெரிக்க மோடி  ஸ்ரீமான்   டொனால்டு டிரம்புக்கும் அதே நிலைதான். ஜனநாயக  கட்சியின் அதிபர் வேட்பாளர்  ஹிலாரி கிளிண்டனை விட  பல மாநிலங்களில் ட்ரம்ப்  குறைவான வாக்குகளே வாங்கியுள்ளார்.  முறைகேடுகள் மூலமே  முன்னணிக்கு வந்துள்ளார் என்பதை அமெரிக்காவில்  மட்டுமல்ல அகில உலகிலும் பேசப்படும்   வெளிப்படையான ரகசியமாகிவிட்டது.

மோடி; பிரதமர் மோடியை இங்குள்ள அமெரிக்க அடிவருடிகள்  தலைக்குமேல் வைத்து  கூத்தாடுகிறார்கள் .

ட்ரம்ப்;   ட்ரம்பை இங்கிருந்து அமெரிக்கா  சென்ற அவாளாத்து அம்பிகள் டொனால்டு ட்ரம்ப் அய்யர் பரத்வாஜ கோத்ரம் என்று மெச்சி மகிழ்ந்து  உச்சி முகர்கிறார்கள். எங்கிருந்தாலும்  ஆதிக்க சக்திகள் ஒரே நேர்கோட்டில்  ஒன்றிணைகிறார்கள்

மோடி;  இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு என்ற வெற்று  கோஷத்தை முன்வைத்து  ஒரே இரவில் 500,   1000ரூபாய்கள் செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை பேரழிவில் தள்ளி அன்றாடம் காய்ச்சிகள், கூலித்தொழிலாளர்கள்,நெடுஞ்சாலைகள் வழியாகவும்  தொடர்வண்டிகளிலும்  பயணம் செய்த அப்பாவி பயணிகள் அனைவரும் ஒரு மிடறு தண்ணீர்    ஒரு வேளை  உணவுக்கு கூட  தவித்து  கதறும் அளவுக்கு செல்லா நோட்டு விவகாரத்தில்  இந்திய ட்ரம்ப் செயல்பட்டார் என்றால் .

ட்ரம்ப்;    அமெரிக்க  மோடி அதிகாரத்திற்கு வந்து ஒரே வாரத்திற்குள்  ஒரு கையெழுத்தில் ஏழு நாட்டு  மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய   தடை என உத்திரவிட்டு   விமான நிலையங்களிலும் விமானங்களிலும் ஏராளமான மக்கள் தவித்து துன்புறும்  நிலையை உருவாக்கினார்

இருவரிடமும் உள்ள  சிறப்பு (?)  ஒற்றுமை இது தான் எனில்  அது மிகையன்று . பிறரை  துன்புறுத்தி இன்பம்  காணும் சாடிஸ மனப்பான்மை  அமெரிக்க மோடிக்கும் இந்திய ட்ரம்புக்கும் கொள்ளை கொள்ளையாய்   கொட்டிக்கிடக்கின்றன

 


Who's Online

We have 57 guests and no members online