முஸ்லிம்  நாடுகளுக்கு குறிப்பாக ஈரான் இராக் லிபியா சோமாலியா , சூடான் சிரியா மற்றும் யேமன் நாடுகளில் இருந்து அகதிகளாகவோ , பயணிகளாகவோ  அமெரிக்காவில் நுழைய  தடை விதித்து  அதிபர்ட்ரம்ப் பின் உத்தரவுக்கு  கூகுள்  கட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கணடனம்தெரிவித்துள்ளார். 

7 முஸ்லீம்  நாடுகளில் இருந்து அமெரிக்காவிற் குள் குடியேற விதிக்கப்பட்டுள்ள தடை கூகுள் நிறுவனஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளது என சுந்தர் பிச்சை குற்றஞ்சாட்டி உள்ளார்.மேலும், தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருக்கும் தனது ஊழியர்களைஅமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இந்த நாடுகளில் மட்டும்187 கூகுள் நிறுவன ஊழியர்களின் வேலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  

இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜெர்னலுக்கு இமெயில் மூலம் சுந்தர் பிச்சை அளித்துள்ள  நேர்காணல் ஒன்றில் டொனால்டு ட்ரம்ப்பின் இந்த உத்தரவு எங்கள் பணியாளர்களை மிகவும் பாதித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து அறிவுசார் பணியாளர்களை கொண்டு வருவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது.இதனால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்   தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது எனதெரிவித்துள்ளார்.  இதே போல்   முக நூல் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும், டிரம்ப்பின் நடவடிக்கைக்குகண்டனம்  தெரிவித்திருக்கிறார்.


Who's Online

We have 44 guests and no members online