அபுதாபி துணை பிரதமரும்  நீதித்துறை தலைவருமான  ஷேய்க் மன்சூர் பின் ஜயாத்  அல் நஹ்யான் முஸ்லீம் அல்லாத மக்களுக்கு சுதந்திரமான தனித்த அந்தஸ்துடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த நடவடிக்கையானது  அபுதாபி நீதித்துறையின் மேன்மையை,  செயல்பாட்டுடன்  சமூகத்தின் எல்லா பிரிவு மக்களும் எளிதில் நீதியை பெறவேண்டும் என்ற   மைய  இலக்குகளை  வெல்ல இந்த முயற்சி முன்னெடுக் கப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிப்பே இது நீதிக்கான அமைச்சரும் துணை பிரதமருமான   ஷேய்க் மன்சூர்  அறிவிக்கிறார். அனைத்து  சமூக மக்களுக்கும் நீதி வழங்குவதை உறுதி செய்யும்  விதமாகவும் பிற சமூக மக்களையும் ஏற்றுளீ  கொள்ளும்  சகிப்புத்தன்மை கொண்ட     கலாச்சாரத்தை வலிமைப் படுத்தவும்  முஸ்லீம் அல்லாத மக்களுக்கான இந்த நீதித்துறை கட்டமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நடவடிக்கை களை   கல்வி, மற்றும்  சமூக, துறைகளிலும் நீதி   பரிபாலனம்  செய்யவும்   திட்டமிடப்பட்டுள்ளது    என இத்துறையின் செயலாளர்  யூசுப் சயீத் அல் இப்ரி தெரிவித்துள்ளார்.  ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களவை முறைமையே பிற சமூக மக்களின்  அனைத்து கோரிக்கையையும் ஏற்றுக்  கொண்டு  சகிப்புத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை   நீதித்துறை ரீதியிலும் கொண்டுவந்து  அமைதி நிலவ உறுதி கொண்டுள்ளது என்கிறார் 

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முடியாட்சி முறையை கொண்ட நாடு என்பது நம் அனைவருக்கும்  தெரியும். பரம்பரையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அரசு   நடத்துவார்கள் . கட்டற்ற அதிகாரமும், மட்டற்ற மமதையும்  கொண்டு யார் நம்மை கேட்கப்போகிறார்கள்  என்று அவர்கள் செயல்பட்டாலும் யாரும் கேட்கப்போவதில்லை. என்பதே முடியாட்சி குறித்து  உலகத்தின் பார்வை அது. .அமீரகத்தின் முக்கிய மாகாணமான அபுதாபியும்  அவ்வாறே  முடியாட்சி  முறையில் ஆட்சி நடத்தப்படுகிறது. ஆனால்  சகிப்புத்தன்மை கலாச்சாரத்தை  முக்கிய கடமையாக கொண்டுள்ள அபுதாபி  பிற சமூக மக்களுக்கும் நீதி நிறை செலுத்த  பிரத்யேகமாக நீதிமன்றத்தை  உருவாக்கியுள்ளனர் எனில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உள்ள தனிப்பட்ட அம்சங்களை  பாதுகாக்கும் நோக்குடன் இந்த  வழிகாட்டலுக்கு முன் உதாரணமாக அபுதாபி  திகழ்கிறது .

இந்த நேரம்  பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என கூச்சலிட்டுக் கொண்டு   குழப்பத்தை குத்தகைக்கு எடுக்கும் பாஜக அரசையும்  நினைத்து  பாருங்கள். வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய ஓர் அரசு நாட்டின்   பல் சமூக மக்களுக்கு எதிரான போக்கை பிரதி பலிக்கும் போக்கு, ம்  அரசாட்சி  அதிகார திரட்சி கொண்ட அரசு ஒன்று மக்களின் மனசாட்சிக்கு மதிப்பு அளித்து  சிறுபான்மை மக்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கிறது. பின்பற்றத்தக்க இந்த   நடைமுறையை நமது நாடும்   பரிசீலிக்குமா?

- ஹபீபா பாலன் 


Who's Online

We have 60 guests and no members online