அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் உலக ஹிஜாப்   தினம் பிப்ரவரி 2ல் கடைபிடிக்கப்பட்டது.  அன்றைய தினம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எவ்வாறு அணியவேண்டும் என முஸ்லிம்   அல்லாத  மாணவிகளுக்கு  கற்றுக் கொடுத்தார்கள்.   

தலைக்கவச ஆடை என்னும் ஹிஜாப்  முஸ்லிம்கள் எவ்வாறு அணிகிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். ஹிஜாப் அணிந்த மாணவிகளின் அனுபவங்களை   கேட்டறிந்தார்கள். வெளிப்படையாக தமது மகிழ்வை  புதிதாக ஹிஜாப் அணிந்த மாணவிகள்    பகிர்ந்துக் கொண்டார்கள்.

முஸ்லிமல்லாத மாணவிகளின் ஆர்வம்

முஸ்லிம் அல்லாத மாணவிகள் சமூக வலைத்தளங்களில்  செல்ஃபீ  எடுப்பதற்கு முன்னதாக ஹிஜாப்  அணிந்து   போட்டோவுக்கு  போஸ்   கொடுப்பதற்கு   நியூ மெக்சிகோ பல்கலைக்கழக  மாணவிகள் தமது வளாகத்தில் அதற்கென தனி சாவடிகள் அமைத்திருந்தார்கள். உலக ஹிஜாப் தினம் 2013ல் நியூயார்க்கை சேர்ந்த  நஜ்மா கான் என்னும் பெண்மணியால்  தோற்றுவிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிந்த முஸ்லிம்  பெண்கள் ஹிஜாப் அணிந்த காரணத்தால் அவமரியாதைப்படுத்தப்பட்டதால் அதனை எதிர்த்து ஹிஜாபின் மேன்மையை பரப்புரை செய்வதற்காக  உலக ஹிஜாப் தினம்   அனுஷ்டிக்கப்பட்டது. முஸ்லிம்  அல்லாத பெண்களும் முஸ்லிம்களைப்போல   ஹிஜாப் அணிந்து உலக  அளவில்  முஸ்லிம்கள் உடனான ஒற்றுமையையும் பறைசாற்ற  இத்தினம்  கொண்டாடப்படுகிறது.

  மேற்குலகில்  பரவி நிற்கும்  இஸ்லாம்போபியா மற்றும் அதிபர்  ட்ரம்ப்பின்   சில முஸ்லிம்  நாடுகளுக்கு எதிரான தடை ஆகியவற்றுக்கு மத்தியிலும்  உலக ஹிஜாப் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்திக்கப்பட்டது.இப்படி பட்ட தினம் அனுஷ்திக்கப்படுவதற்கு காரணமாக இருந்த,  தான் ஹிஜாப் அணிந்ததால் சந்தித்த துன்பங்களை  விவரிக்கும் போது  தனது   நடுநிலைப்பள்ளி  பயிலும் பருவத்தில் ஹிஜாப் அணிந்த  காரணத்தால்  பாரபட்சமாக நடத்தப்பட்டதாக சொல்கிறார்.  பேட் மேன்  ,  நிஞ்சா என அவர் பரிகாசிக்கப்பட்டார்.

பரிகாசம் பரவலாக்குவதற்கு வழிவகுத்தது

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்குப்  பிறகு  ரஜ்மா பல்கலைக் கழத்தில் நுழையும்  தருணத்தில்  ஒசாமா பின்  லேடன் என்றும்   தீவிரவாதி   என்றும் அழைக்கப்பட்டாராம். அப்போது  இந்தப் பாகுபாட்டிற்கு முடிவு கட்ட நினைத்த அவர்  தன்னுடன் பயிலும்  மாணவிகளிடம்  ஹிஜாப்  அணியும் அனுபவம் குறித்து கேட்பதுதான்   அதனை   பரவலாக்குவதுதான் ஒரே வழி  என புரிந்து கொண்டேன் என்கிறார். 

சராஹ் றிவாளி என்னும் முஸ்லிமல்லாத மாணவி,   சில மாணவிகளுடன் இந்த ஆண்டு உலக ஹிஜாப் தினத்தன்று ஹிஜாப் அணிந்து கொண்டார்.   தலையை   மறைத்துக்கொண்டு அணியும் இந்த ஸ்டைல் தன்னை  அழகியாக   நினைக்க வைத்து விட்டது என்கிறார் .

-ஹபீபாபாலன்   


Who's Online

We have 41 guests and no members online