ஜனவரி 27  ம் தேதி   அதிகாலை  அமெரிக்காவில்   டெக்ஸாசின் சிறிய   நகரமான விக்டோரியாவில்  உள்ள இஸ்லாமியமையத்தில் நெருப்பு ஜூவாலைகள்   எழுந்தன.

201 ஏர் லைன் ரோடு  பகுதியில் உள்ள இஸ்லாமிய மையத்தில்  திடீரென  தீப்பற்றி  எரிவதை   அருகில் உள்ள  வணிக  வளாக உரிமையாளர் பார்த்துள்ளனர். தீ  எப்படி பற்றிக்கொண்டது  என்பதைக்  கண்டுபிடிக்க  முடியவில்லை  என்று கூறிய விக்டோரியா நகர  தீயணைப் புத்துறையின்   தலைவர்  டாம்  லெக்லார்,  இது  தொழுகை  நடத்தும் இடம் இங்கு  வந்து  இந்த  தீய  செயலை  செய்தவர்கள்   யார் ? என தனது வேதனையை   வெளிப்படுத்தினார்.  

ஆலயத்தில் இடம்

விக்டோரியா இஸ்லாமிய   மையத்தின்  தலைவர்  ஷஹீத்   ஹாஸ்மி கூறும்போது,  தெருமுனை வரை தீயின்   நாக்குகள்   நீண்டன  என்கிறார் .  அதிகாலை  2மணிக்கு தொடங்கிய  தீ அணைப்பு  பணி  காலை 6 மணி வரை   நீடித்தது.   சேதமடைந்த பகுதிகளை   தவிர்த்து  ஓரங்களில்  மக்கள் தொழுதனர். இதனைக்கண்ட   முஸ்லிமல்லாத மக்களுக்கு  இந்த காட்சி  நெகிழ்ச்சிக்குரியதாக    இருந்தது. நாங்கள் ஒற்றுமையுடன்  கூடி  தொழுகையில்   ஈடுபட்டு வருகிறோம்.  அதே  ஒற்றுமையு டன் எவ்வளவு   துரிதமாக  இயலுமோ அவ்வளவு துரிதமாக   கட்டி  முடிப்போம்  என்கிறார்கள்.மறுநாள் அந்தப்பகுதியில்  உள்ள அனைத்து முஸ்லிம்களும்   தொழுகைக்கு   திரண்டனர். இதற்கிடையில்   சம்பவத்திற்கு  மறுநாள் காலையில்   அனைத்து  சமூக  மக்களும்    விகடோரியா மஸ்ஜித் வளாகத்தில் திரண்டு வந்து பிரார்த்தனை செய் தனர்.  மஸ்ஜித்  தீ விபத்தில்   முஸ்லிம்களின்    வேதனையில்   பங்கு  கொள்ளும்  விதமாக   கூடினர்.  அதைவிட  நெகிழ்ச்சியான   நிகழ்வு என்ன வெனில்   முஸ்லிம்  மக்களுக்கு   தொழுகை நடத்து வதற்கு  தம்  வழிபாட்டு  தல சாவியை அந்த மக்கள் வழங்கினர். இது நல்லிணக்கம்  பேணும்   முன்னுதாரணம்   ஆகும்  என  அனைத்து  சமுக   மக்களும்  மகிழ்வுடன்  கூறுகின்றனர்.

கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்

இந்த நகரில் உள்ள 4 கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவாலயத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.இந்த நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்கு வந்து அன்பு மற்றும் அமைதியை வலியுறுத்தும் மனித சங்கிலி அமைத்து நின்றார்கள். இத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு செடியையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். இந்த செடி புதிதாக அமையவுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் சமூக நல்லிணக்கத்தின் இந்த உன்னத தருணத்தை நினைவுப்படுத்தும் வகையில் நட்டப்படும் என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

எரிந்த பள்ளிவாசலுக்கு பதிலாக புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு பொது மக்கள் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர். இது வரை 10லட்சம் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது.மதவெறி ட்ரம்பின் கனவுகளை தகர்த்து அமெரிக்காவில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்குகிறது.

 - ஹபீபாபாலன்


Who's Online

We have 45 guests and no members online