கடந்த ஜனவரி 23 அன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கு  கொண்டு தஸ்லிமா நஸ்ரின் பேசுகையில்:

“இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களின் உரிமைகளைக் காக்க பொது சிவில் சட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்ய முடிகிறது. அவர்களுக்கு சொத்துரிமையும் உள்ளது. அது எவ்வளவு முற்போக்கானது என்பதை நாம் காண்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாவம் தஸ்லிமா,  தன்னை இயக்கும் சங்கபரிவார் சொன்னவற்றை அப்படியே வாந்தி எடுத்துள்ளார். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுவதற்கு 13 நூற்றாண்டுகளுக்கு முன்பே  பெண்களுக்கு இஸ்லாம் சொத்துரிமை வழங்கியுள்ளது என்று அன்னி பெசன்ட் அம்மையாரே பேசியிருப்பது அவருக்கு தெரியாதது போல் நடித்துள்ளார். ஹிந்து மதம் பெண்கள் விஷயத்தில் முற்போக்கானது என்றும் தஸ்லிமா இலக்கிய விழாவில் குறிப்பிட்டுள்ளது தான் அவரது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சங்க பரிவாரின் ஊதுகோலாக மாறிவிட்ட தஸ்லிமாவிற்கும் அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் குடும்ப போராளிகள் கவனத்திற்கு “வாழ்வைமுன்னேற்றும் வழிமுறைகள் 

"( ஸ்வாமி. ராம் சுக்தாஸ் எழுதி, கீதாஅச்சகத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டது) எனும் நூலிருந்து சில மேற்கொள்களை சுட்டிக்காட்டுவது அவசியமாக உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள இந்த நூலில் 15 க்கும் அதிகமான தலைப்புகளில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். சில தலைப்புகள்,  இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான  குற்றங்களாக கருதப்படும் சதி மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை போன்றவற்றை பகிரங்கமாகவே ஆதரிக்கின்றது.

இந்நூல், ஆர்எஸ்எஸ் நூல் நிலையங்களில் தாராளமாகவே கிடைக்கின்றது. கேள்விபதில் பாணியில், அந்நூலில் உள்ள குரூர மனிதாபிமானமற்ற பெண்கள் தொடர்பாக சில கருத்துகள்  பெண்களை எவ்வளவு ‘முற்போக்காக’  சங் பரிவார் கருதுகின்றது என்பதை புரிந்து  கொள்ள உதவிடும். 

 கேள்வி : கணவன் அடித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?

பதில் : அவளது முற்பிறவி பாவங்கள் இதன்  மூலம் களையப்பட்டு அவள் தூய்மையடைவதாக எண்ண வேண்டும். அவளது பெற்றோருக்கு இது தெரியவந்தால்; அவர்கள் அவளை உடன் அழைத்துச் சென்று விடவேண்டும். ஏனென்றால், தனது பெண்ணிற்கு முறையான பயிற்சிஅளிக்காதது  குற்றமாகும்.

கேள்வி : அவளது பெற்றோர், அவர்களது  வீட்டிற்குள் ஏற்கவில்லையானால் அவள் என்ன செய்ய வேண்டும் ?

பதில் : இந்நிலையில் அவளால் என்ன செய்ய  இயலும்? (அப்படியே அடி, உதையை சகித்துக் கொண்டு)  முற்பிறவியின் பலனை அனுபவிக்கவேண்டியது தான். இதனால், இவளது பாவங்கள் கழுவப்படலாம்; அவளது கணவன் அவளை விரும்ப ஆரம்பிக்கலாம்.

 கேள்வி : சதி ப்ரதா (கணவனின் சிதையில்  மனைவி உயிருடன் எரியூட்டப்படுவது) சரியா ?  தவறா ?

பதில் : இறந்த கணவனின் சடலத்துடன் மனைவி எரியூட்டப்படுவது முற்கால பாரம்பரிய  பழக்கமல்ல. எவளது உள்ளத்தில்  தன்முனைப்பும்; உண்மையும் உள்ளதோ, அவள் எரியூட்டப்படாமல் தானாகவே எரிந்துவிடுவாள். அவளுக்கு அது வேதனையையும் தராது. இவ்வாறு செய்யவேண்டும் என்ற பாரம்பரியம் என்பது அவளது பத்தினித்தன்மை; நம்பிக்கை  மற்றும் வாய்மையைப் பொறுத்தது.

ஆர்எஸ்எஸ் குடும்பத்தினர் ,  மனு ஸ்ருமிதியை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக்க முயலுகின்றனர். அவர்களது பீதமாகர்களில் ஒருவரான வி.டி. சாவர்கர், இதனை வேதங்களுக்குப் பின், மிகவும் போற்றுதலுக்குரிய நூல் எனக்குறிப்பிடுகிறார். இந்த மனுஸ்ருமிதியின் 9 ஆவது அத்தியாயம் ஹிந்து பெண்களையும்,  சூத்திரர்களையும் அடிமைகள் எனக் குறிப்பிடுகின்றது.

 ஹிந்து பெண்கள் குறித்த குறிப்பிடத் தகுந்த சில சட்டங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

1. காலை மாலை எந்நேரமும் பெண்கள் அவர்கள் குடும்பத்து ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும்.(9/2)

2. சிறு வயதில் தந்தையும்; வாலிபத்தில் கணவனும் ; முதிய வயதில் பிள்ளைகளும் பாதுகாப்பார்கள். எந்தச் சூழலிலும் ஒரு பெண் சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள்.(9/3)

3. தீய எண்ணங்களில் சாய்வுகளிலிருந்து பெண் பாதுகாக்கப்படவேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்படா விடில், இரு குடும்பங்களுக்குஇழுக்கை ஏற்படுத்தும்.(9/5)

4. ஆண்கள் அழகாகவோ; கவர்ச்சியாகவோ  இருக்க வேண்டுமென ஒருபெண் கருதக்கூடாது. அவன் ஒரு ஆண் என்பதற்காகவே, தனது அழகைப் பொருட்படுத்தாது, அவலட்சணமானவனாக இருந்தாலும் ஒப்படைத்து விட வேண்டும் (9/14) 

5. பெண்களுக்கென புனிதத்தன்மை இருப்பதாக வேதம் கூறவில்லை. அவள் தூய்மையற்றவள்; பொய்மை என்று தான் கூறுகிறது. இதுவே இறுதித் தீர்ப்பாகும் (9/18)

 முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதற்காக பொதுச் சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி வகையறாக்கள் முதலில் இந்த பிற்போக்குச் சட்டங்களின் பிடியிலிருந்து தங்கள் குடும்ப பெண்களை பாதுகாக்க முன்வரட்டும்.

-நிறைமதி


Who's Online

We have 38 guests and no members online