பல்வேறு காரணங்களுக்காக, ஒரு முஸ்லிம் பெண் பணிக்குச் செல்ல வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சிலர், உயர் வாழ்வியல் வசதிகளுக்காக தனது கணவரின் வருவாயை உயர்த்த நாடுகின்றனர்.  இன்னும் சிலர், தனது பிள்ளைகளின் உயர் கல்விக்காக உழைக்கின்றனர். தொழில்முறை பணியாளர்கள் சிலரைத்  தவிர்த்து விட்டுப் பார்த்தால், பெரும்பான்மையினர் தங்களது தேவைக்காகவே உழைக்கின்றனர். பிற பெண்களைப் போலவே, முஸ்லிம் பெண்களும் தங்களது குடும்பத்தினர்; மற்றும்  தங்களை சார்ந்துள்ள பிறரையும் கவனித்துக் கொள்வதை முதன்மையாகக் கொள்கின்றனர்.

 பணிக்குச் செல்வது முஸ்லிம் பெண்களுக்கு எண்ணற்ற  சங்கடங்களை ஏற்படுத்துகின்றன. சங்கடங்கள் அவர்களது மார்க்க கடமைகள் குறித்தானது மட்டுமல்ல. பணியிடத்தில் நிலவும்  சூழல். அனேகமாக இஸ்லாமிய வாழ்வியல் முறைக்கு முரணாகவே  அமைந்துள்ளது. அத்தகைய முரண்கள் ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து, பாதுகாப்பாக சமூக நடைமுறைகளைப் பேண வேண்டிய நிலை முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படுகின்றது. 

தனது இறை நம்பிக்கையை பாதுகாக்க அனுபவத்தில் கடுமையாக அவள்  போராட வேண்டியுள்ளது.  இன்றைய பணிச் சூழலில், இஸ்லாமிய கொள்கை; கோட்பாடுகள், மேலைக் கலாச்சாரத்துடன் பலவிதங்களில்  முரண்பட்டு  உள்ள நிலையில் தடுமாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

 பணிக்கு ஹிஜாபுடன் செல்வது ஒரு சவாலா?

பெண்கள்முறையாக முழுமையாக ஆடை அணிந்து, ஹிஜாபைப் பேண வேண்டுமென்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்.  

திருக்குர்ஆன் 24: 31

பணிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதில் பல  நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.

 

  • சிலர் தங்களது சக ஊழியர் மற்றும் மேலாளருக்கு அஞ்சி, ஹிஜாப்  அணிவதை முற்றிலுமாக கை விட்டு விடுகின்றனர். 
  • சிலர் தாங்கள் பாதுகாப்பாக உணரும் சிலரது வீடுகளுக்கும்; மஸ்ஜித்களுக்கும் செல்லும்போது மட்டும் அணிகின்றனர்.
  • சிலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் பொழுதெல்லாம்  அணிகின்றனர். 
  • பக்தியின் வெளிப்பாடாகவும்; நம்பிக்கையின் வெளிப்பாடாகவும்; சுய  அடையாளமாகவும் சிலர் அணிகின்றனர்.
  • வேறு சிலர் அழகுக்காகவும் அணிகின்றனர். இன்னும் சிலர், தங்களது பணியிடங்களில், தங்களது உடலமைப்பு எவ்வித து£ண்டுதலுக்கும்  வித்திட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அணிகின்றனர். 

ஹிஜாப் அணிந்துள்ள போதிலும், இவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணி புரிகின்றனர். ஆனால், ஹிஜாப் பற்றிய அறியாமையின் காரணமாக இவர்களை அறிவிலிகளாகவும்; அழுத்தப்பட்டவர்களாகவும் சிலர் கருதுகின்றனர். ஹிஜாப் அணிந்து வெளியே வருபவர்கள் பற்றி அநாகரீகமாக குற்றம் சாட்டும் மனப்போக்கு நிலவுகின்றது.  மேலதிகாரிகளாக; நிர்வாகிகளாக; கண்காணிப்பாளராக பணியாற்ற விரும்புவோருக்கு இப்போக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.  அத்துடன் முஸ்லிம் பெண் என்பதற்காகவே சில இடங்களில் பதவி உயர்வை நிராகரிக்கும் போக்கும் நிலவுகின்றது.

ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு முஸ்லிமல்லாதவரின் ஆதரவு

ஹிஜாப் அணியாத ஒரு  முஸ்லிம் பெண்மணியால்  பணியிடத்தில் தனது வாழ்வு பாதிக்கப்பட்டதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண்மணி தெரிவித்தார். ஆனால் இதே பெண்மணி முஸ்லிமல்லாத தனது மேலதிகாரி,ஹிஜாப்  அணிவதற்கு அனுமதி அளித்தார் என்று கூறுகின்றார். மேலும்   அலுவலகத்தில் தனது பணியிடத்தில் தொழுகை நடத்துவதற்கு வசதியாக கூடுதலாக கதவுடன் கூடிய தடுப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலதிகாரிக்கு  அடுத்தபடியாக, கதவுடன் கூடிய பணியிடமாக அலுவலகத்தில் தனது இடம் மட்டுமே உள்ளது என்று நன்றியுடன்  குறிப்பிடுகிறார். மேலும் வெள்ளிக்கிழமை ஜும் ஆ  தொழுகைக்காக இரண்டு மணி நேர  சலுகையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.

ஹிஜாப் அணிவதில் வேலைக்குச் செல்லும் முஸ்லிம்கள்  வித்தியாசமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். நான்  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது முதல் இப்பொழுது வரை, தொடர்ச்சியாக வித்தியாசமான ஓரக்கண்பார்வைகள்; முறைப்புகள் போன்றவை தொடரத்தான்செய்கின்றன. இரட்டை பட்டதாரியான, தொழில்முறை பணியாளரான  (புரபெசனல்) நான், எனது தலைமுடி கழுத்து மார்பு போன்றவற்றை  மறைக்கும்ஹிஜாப் அணிகின்றேன். எனது உடலமைப்பை எனது கணவன் மட்டுமே பார்ப்பதற்கு என்று நான் நம்புவதால், இதனை அணிகின்றேன். என்னுடைய மார்க்கத்தை, வாழ்வியல் நெறியை நான் புரிந்துகொண்டதிலிருந்து நான் அணியக்கூடிய முறை வேறுபடுகின்றது என்பதனைஒப்புக்கொள்கிறேன்.  

அமெரிக்காவில் இன்னமும் பெண்கள், அவர்களது உடலமைப்பைக்  கொண்டே மதிப்பிடப்படுகின்றனர். ஆனாலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏற்படுத்தும் நாணம், ஒழுக்கத்தையும் நன்மையையும் தரும் என அறிந்துள்ளனர். ஹிஜாப் அணிவது தனிநபர் விருப்பமல்ல; மாறாக, அது மார்க்க கடமை  என அதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம். இது ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய கடமையாகும். இதனை எவ்வாறு அணிவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.   முஸ்லிம்களாகிய நாம், அல்லாஹ்விற்கு நெருக்கமாக்கி வைக்கக்கூடியதும்; நாளை மறுமையில் நல்லோர்களாக ஆக்கக் கூடியதுமான செயல்களில் அவசியம் ஈடுபட வேண்டும்.

  (சவால்கள் தொடரும்)


Who's Online

We have 53 guests and no members online