சிரியாவில் ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் உள்நாட்டு போரின் காரணமாக அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பாகம் மக்கள் கலவரப்பட்ட சூழலிலும், கடுமையான பஞ்சத்திலும் வாழ்கிறார்கள் என்று  ஐநா வின் மனிதஉரிமை விவகாரச் செயல்தலைவரும், அவசர நிவாரணப் பணி செயலாளருமான ஓபிரைன் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அளித்துள்ள அறிக்கையில் சிரியாவைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்கள் குறித்து இவ்வாறு விளக்கினார்:

"சிரியாவில் 12.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுகாதார உதவி தேவைப்படுபவராகவும் மேலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி கடுமையான விலையேற்றத்திற்கும், உணவு தட்டுப்பாடிற்கும் மத்தியில் வாழ்கின்றனர். "அத்தியாவசிய கட்டுமானங்களின்  அழிவு, குறிப்பாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இடிக்கப் படுதல், பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருப்பது, பல்வேறு தடைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, உணவு பொருட்களின் விலை, எரிபொருள், மின்சாரம் பற்றாக்குறை அத்துடன் சுத்தமான குடிநீர் இல்லாமல் போனதற்காக நாடு முழுவதும் சிரிய குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் கடும் விலை கொடுக்க வேண்டி வந்துள்ளதையும் பட்டியலிட்டு  சுட்டிக் காட்டினார்.

மக்களின் இடப்பெயர்ச்சி விகிதம் குறித்து விமர்சித்த அவர்: "2016ல், இடப்பெயர்ச்சி விகிதம், எந்தவிதமான தொய்வும் இன்றி தொடர்ந்தது, ஜனவரி மற்றும் டிசம்பர்க்கு இடையே சுமார் 5000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். - இதில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இடம்பெயந்துள்ளனர். 

பாதிக்கும் மேற்பட்ட சிரியர்கள் பலவந்தமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 2011 முதல், இவர்களில் 6.3 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். 4.9 மில்லியனுக்கும் அதிகமான பேர் அண்டை நாடுகளில் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ளனர். மேலும் சுமார் 1.2 மில்லியன் பேர் ஐரோப்பாவில் குடியேற விண்ணப்பித்துள்ளனர்."

மேலும் சிரியாவின் இலட்சக்கணக்கான குழந்தைகளின் இரக்கமற்ற யதார்த்தத்தை ஒபிரெய்ன் விளக்கினார். அது, சிரியாவில் அதிகமான பிச்சை, கடத்தல் மற்றும் நாடோடிகளாக ஆக்கப்பட்டுள்ளதே அது. 

நாடு முழுவதும், வாழ்வாதாரங் களும் குடும்பங்களும் சிதைந்து போயுள்ளதால், குடும்பங்களைப் விட்டு பிரிந்த குழந்தைகள் இதுபோன்ற காரியங்களுக்காக பிடித்து பயன்படுத்தப்படுவது வளர்ந்து வரும் பிரச்சினையாக உள்ளது எனக் கூறினார். சுமார் 5.82 மில்லியன் குழந்தைகள் மற்றும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி பருவம் வரை உள்ள இளைஞர்கள், 118,000 பாலஸ்தீன அகதி குழந்தைகள் உள்ளிட்டோர் சிரியாவிற்குள் கல்வி உதவி தேவையுடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

நிறைவாக அவர்,"சிரியர்கள் அனைவரது பார்வையும் மற்றும் மொத்த உலகத்தின் பார்வையும், ஜெனீவா வை நோக்கியே உள்ளது" என்று அழுத்தமாகக் கூறினார். சிரிய அரசாங்கத்திற்கும் எதிர் தரப்பிற்குமான பேச்சுவார்த்தை ஐநா தலைமையில் ஜெனீவா நகரில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


Who's Online

We have 50 guests and no members online