சிலர், இஸ்லாமிய சூழலிலேயே வேலை செய்கின்றனர். அது அவர்களது மார்க்கத்தை பேணுவதற்கு மிகவும் உறுதுணையாக அமைகின்றது. இருப்பினும் அதிகமான முஸ்லிம் பெண்கள் தங்களது பணியிடங்களில்  மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர்.

முஸ்லிம்கள், பிற சமயத்தவருடன் இணைந்து பணி செய்யும் வேளையில், விகிதாசாரத்தில் மற்றவர்கள் மிகைத்து விடும் பட்சத்தில், தான் தனித்துவமாக  செயல்படுவதா அல்லது அவர்களுடன் கலந்து விடுவதா என, முஸ்லிம் பெண் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களுடன்   இரண்டற கலந்துவிடும் பட்சத்தில், சில பழக்க வழக்கங்களும்; தேவையற்ற உரையாடல்களும் உருவாகக்கூடும். அச்சந்தர்ப்பங்களில்,  அந்த சூழலிலிருந்து விலகிக் கொள்வது அப்பெண்ணுக்கு சிறந்ததாகும்

 பணியிடங்களில் இஸ்லாமிய நெறிமுறைகள்

 பாலின பாகுபாடும்; பாலியல் சீண்டல்களும் பொதுவாக அனைத்து அமெரிக்க பெண்களையும் பாதிக்கின்றது. அமெரிக்காவில், பெண்கள் பாலியல் சாதனங்களாகவே பார்க்கப்படுகின்றனர். 

இது பணியிடங்களில் பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வகையில்,  ஹிஜாப் அணியக்கூடிய பெண்கள், ஹிஜாப் அணியாத பிற முஸ்லிம்கள் அல்லது பிற சமய பெண்களை விட பாதுகாக்கப்பட்டவர்களாக உணருகின்றனர். ஒரு ஆண் மேலதிகாரி, தன்னுடன் அமருமாறு முஸ்லிம் பெண்ணுக்கு  கூறினால்,அமரலாமா ? தன்னுடன் பணிபுரியும் ஆண், அவளை விரும்புவதாகக் கூறினால் என்ன செய்ய வேண்டும் ? தேவையில்லாமல் ஆணும் பெண்ணும் கலந்திருப்பதை இஸ்லாமிய சட்டம் தடை செய்கின்றது. ஆணும் பெண்ணும் கலந்திருந்தால், இயற்கையான பாலின கவர்ச்சி அவர்களை உந்தக்கூடும். தவிர்க்க இயலாத நிலையில், ஆணும் பெண்ணும் கலந்து பணியாற்ற வேண்டிய சமூக சூழல் குறித்து  இஸ்லாமிய நெறிமுறைகள் வழிகாட்டுகின்றன. 

அல்குர் ஆன்கூறுகின்றது: .... ( அல்குர் ஆன் 24:31) அத்துடன் ஆணும்; பெண்ணும் தங்களின்  பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் இதே வசனம் உபதேசிக்கின்றது (அல்குர் ஆன் 24:31) ஆணும் பெண்ணும் பேசுவதாக  இருந்தால், ஒருவர் மற்றவரின் கண்ணியத்தை மதிக்க வேண்டும்.  இத்தகைய கலந்துரையாடலின்போது, கண்ணியத்துடன் அல்லாஹ்வின் மீதான உள்ளச்சமும் (தக்வா)பேணப்பட வேண்டும் (அல்குர் ஆன்24:31)  அல்குர் ஆன் கூறுகின்றது

" நன்மையிலும்; இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். பாவத்திலும் வழிகேட்டிலும்உதவி செய்யா தீர்கள் அல்குர் ஆன் 5:2) 

ஒரு முஸ்லிம் பெண் வேலைக்குச் செல்ல நாடினால், இஸ்லாமிய நெறிமுறைகளை அறிந்துகொள்வதோடு, மற்றவர் களும் உணர்ந்து கொள்வதோடு, அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும்.

 வியாபார நெறிமுறைகள்.

 முஸ்லிம் பெண் பணியாளர், தனது வாழ்வில் பல்வேறுபட்ட  நபர்களையும், அவரவரின் வேறுபட்ட நடைமுறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. சிலவேளை, மேலதிகாரி அல்லது சகபணியாளர்கள்  தவறான நெறியுடையவர்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு, தனது வேலை நேரத்தை மாற்றி அறிவித்து, வேலை செய்யாத நேரத்திற்குமான ஊதியத்தைப் பெறலாம். 

தனது செயலை நியாயப் படுத்துவதற்காக ,மற்றவர்களையும் அதனைச் செய்ய தூண்டுவார்கள். இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்பது தெளிவாகத் தெரிந்தாலும், மனித ஆசையின் காரணமாக அதிலும் குறிப்பாக பொருளாதாரத் தேவையாக  இருக்கும்பட்சத்தில், மேலதிகமான சம்பளம் கிடைப்பதை தேர்வு செய்யலாம். இதனை விடுத்து, தவறிய வேலை நேரத்தை விடுத்து, தான் வேலை செய்த நேரத்தை மட்டும் சரியாகச் சொல்ல அப்பெண்  வழிகண்டாக வேண்டும். அல் குர் ஆன் ஒப்பந்தங்களையும், கடமைகளையும் பேணிக் கொள்ள வலியுறுத்துகின்றது. "விசுவாசிகளை தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள் "அல்குர் ஆன் 5:1. பெரியதோ; சிறியதோ, வேலையில்  பொய் சொல்வதோ; ஏமாற்றுவதோ;  விசுவாசமாற்று இருப்பதோ ஒரு முஸ்லிமிற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டதாகும்.

 ஒரு முஸ்லிம் புறம் பேசுவது; திருடுவது; ஏமாற்றுவது அல்லது தனது  மார்க்கம் ஏற்காத எந்த ஒன்றையும் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். புறம் பேசுவது மனமாச்சரியத்துடன் நடப்பது மிகப்பெரும்  பாவங்களாகும். மேலதிகாரி அல்லது சக பணியாளர் குறித்து கிசுகிசுப்பது  சுவையானதாகத் தோன்றினாலும், முஸ்லிம் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்க வேண்டும். 

இது இறைநம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். அனேகர் இதனை அறியாமல் ஈடுபடுகின்றனர். இதனை ஒரு சிறிய விஷயமாகக் கருதுகின்றனர். ஆனால், அல்லாஹ் எச்சரிக்கையோடு இருக்கும்படி  நினைவுறுத்துகிறான். இதனை மிகச் சிறியதாக இவர்கள் கருதினாலும்,  அல்லாஹ்வின் பார்வையில் இது பெரும் பாவமாகும். 

அல்குர் ஆன் கூறுகின்றது:  அல்குர் ஆன் 24:15)

 பணிக்குச் செல்லும் பெண்கள் இன்றைய சூழலில் மிக கடுமையான சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால், தனது மார்க்கத்தைஅறிந்து, தன்னால் இயன்றவரை அதனை கடைப்பிடிக்க முயற்சிக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு இத்தகைய சவால்களை எதிர்கொள்வதுசாத்தியமானதே.

(முற்றும்)

 


Who's Online

We have 51 guests and one member online

  • ymegywu