இஸ்ரேல் அரசானது, பாலஸ்தீன மக்களிடம் இன பாகுபாடு காட்டுவதாக மார்ச் 15ஆம் நாள் (2017) வெளியான ஐ.நா. அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.

அந்த அறிக்கையானது, இஸ்ரேல் இன ஒதுக்கல் அரசு நடத்துவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டி இருக்கிறது. இஸ்ரேலின் இனவெறிக் கொள்கையை நேரடியாக குற்றம் சாட்டி வெளியாகி இருக்கும் ஐ.நா.வின் முதல் அறிக்கை இதுதான்.


ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் மேற்கு ஆசியாவுக்கான சமூக ஆணையம் (U.N. ECONOMIC AND SOCIAL COMMISSION FOR WESTERN ASIA )   என்ற அமைப்பு, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் நடத்தும் விதங்களை ஆய்வு செய்து அறிக்கையாக தயாரித்து ஐ.நா.விடம் ஒப்படைத்து இருக்கிறது.


இஸ்ரேல் முழு பாலஸ் தீனத்தையும் உள்ளடக்கி ஒரு இனவெறி அரசை கட்டமைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது.இஸ்ரேல் ஒரு இனவெறி அரசு, இனஒதுக்கல் முறையை ஏற்படுத்திக் கொண்டு பாலஸ் தீன மக்களை தண்டித்துக் கொண்டிருக் கிறது என்று ஐ.நா.வின் பிரிவு ஒன்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் குற்றம் சாட்டி யிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் ஐ.நாவுக்கான துணைப் பொதுச் செயலாளர் ரிமாகலப்.


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஐ.நா. மேற்கு ஆசியாவுக்கான பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையத்தின் தலைமையகமும் பெய்ரூட்டில தான் இருக்கிறது. மேற்கு ஆசியாவில் உள்ள 18 அரபு நாடுகள் இவ்வமைப்பில் இடம் பெற்றிருக்கிறது. இதன் உறுப்பு நாடுகள் ஏற்பாட்டின் பேரில்தான் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் ஒரு இன வெறி அரசு என்பதற்கான ஆதாரங்களை நிறையவே தெகுத்திருக்கிறார்கள். எனினும் இந்த அறிக்கைகள் இஸ்ரேலை எதுவும் செய்திட முடியாதது. சர்வதேச நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்தால் தான் இஸ்ரேல் நடத்தும் இன ஒதுக்கல் ஆட்சி நிர்வாகம் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பு கூறுகிறது. பாலஸ்தீன மக்கள் வெவ்வேறான சட்டதிட்டங்கள், வாழ்க்கை முறைகள், கொள்கைகள் வழியாக பல நுணுக்களாக பிரிந்து கிடப்பதும் இஸ்ரேலுக்கு வசதியாகி விட்டது என்று அறிக்கை கூறுகிறது.

பாலஸ்தின மக்களை 4 வகையாக அறிக்கை பிரித்துக் காட்டுகிறது. இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தின குடிமக்கள், கிழக்கு ஜெருசலத்தில் இருக்கும் பாலஸ்தின மக்கள், மேற்கு கரை மற்றும் சாசா பகுதியில் இருக்கும் முஸ்லிம் அகதி முகாம்கள் அல்லது வெளிநாடுகளில் தஞ்சமாக இருக்கும் முஸ்லிம்கள் என நான்காக பிரிக்கிறது. ஐ.நா.சபை, உறுப்பு நாடுகள் மற்றும் பாலஸ்தின சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளின் வேரை இந்த அறிக்கை அம்பலப்படுத்தும் என்கிறார். அறிக்கை தயாரித்த மேற்கு ஆசயாவின் சமூக பொருளாதார மையத்தின் நிர்வாக செயலர் ரிமா கலாஃப்.இஸ்ரேலுக்கு எதிராக ஏராளமான அறிக்கைகள் ஐ.நா.வில் சமர்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை வழக்கம் போல் அமெரிக்க தீர்மானம் கொண்டு வந்து தடுத்துவிடும் ஆனால் இந்த புதிய அறிக்கையின் மீது ஐ.நா.வின் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்று காலம் கருதுகிறார். பொருத்திருந்து பார்ப்போம். பாலஸ்தின பகுதிக்கான ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆய்வாளர் ரிச்சர்ட் ஃபால்க் இந்த அறிக்கை தயாரிப்பதில் உறுதுணையாக இருந்திருக்கிறார்.


Who's Online

We have 54 guests and no members online