ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் வெளியில் தெரியும்படி மத அடையாளங்கள் அணிய தடைவிதித்துக் கொள்ளலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (european court of justice) கடந்த வாரம் ஒரு உத்தரவு போட்டது.

இந்த உத்தரவு கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத,சீக்கிய மதங்களுக்குப் பொருந்தும்.


ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு மத அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. நீதிமன்றம் மத அடையாளங்களை மட்டுமல்லாமல் அரசியல் சின்னங்கள், கொள்கைகளின் சின்னங்களையும் அணிந்து கொண்டு பணி இடத்துக்கு வருவதையும் தடுக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக சீக்கியர்களின் தர்பன், கிறிஸ்தவர்களின் சிலுவை, யூதர்களின் கிருபான் மற்றும் முஸ்லிம்களின் முக்காட்டு துணி ஆகியவைகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று யூனெய்டெட் சீக்ஸ் என்ற சீக்கிய அமைப்பு தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அடையாளங்கள் இருப்பதாக கூறி வேலை வாய்ப்புகள் வழங்குவதில் குறிப்பிட்ட மதத்தினரை புறக்கணிக்க முடியும் என்கிறார். யுனெய்டெட் சீக்ஸ் அமைப்பின் சர்வதேச சட்ட இயக்குனர் மஜிந்தர்பால் கவுர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு பணியாளர் தனது மத நம்பிக்கையை கடைப் பிடிக்கும் அடிப்படை மத உரிமை கொடுக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். ஆம்னஸ்டி இன்டர்னேஷனல் என்ற பொது மன்னிப்புச் சபையும் இந்த உத்தரவை விமர்சனம் செய்திருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்களையும், பெண்களையும் இந்த உத்தரவு பாகுபடுத்துகிறது என்கிறார். ஆம்எனஸ்ட்டியின் ஜான் தால் ஹீயிசன். பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.


தனி மனிதனின் அடையாளமும், தோற்றமும் அரசியல் பிரச்சனை ஆக்கப்படுமானால் அந்த ஆபத்துகளில் இருந்து மக்களுக்கு கூடுதலான பாதுகாப்பு தேவைப்படும். இறை நம்பிக்கை உள்ள சமூக மக்களை இழிவுபடுத்த விருப்பம் உள்ளவர்களுக்கான வழியை ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த அனுமதி எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர். முஸ்லிம் பெண்கள் பணிபுரியும் இடங்களின் ஸ்கார்ப் அணிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுமோ என்ற கவலை ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.


இரண்டு வழக்குகள்


ஐரோப்பாவில் இது சம்பந்தமான இரண்டு பிரச்சனைகள் ஏற்கெனவே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டில் ஜி4 எஸ் செக்கியூர் சொலூசன் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சமீரா அச்பிதா தலையில் முக்காடு இட்டுக் கொண்டு பணிக்கு வர விருப்பம் தெரிவித்த போது நிறுவனம் அவரை வேலையை விட்டு நிறுத்தியது.
இரண்டாவது சம்பவம் அஸ்மா பவ்னொயி உடன் சம்பந்தப்பட்டது. இவர் மைக்ரோ போல் என்ற பிரான்சு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
2009ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் பொருள் வாங்க வந்த ஒரு கஸ்டமர் அஸ்மா அணிந்திருந்த ஸ்கார்ப் பற்றி புகார் தெரிவித்தார் அஸ்மா எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.அச்பிதா வழக்கில் நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது. வேலையாட்கள் பணி செய்யும் இடங்களில் வெளியில் கோட்பாடுகளின் அடையாளங்களை அணிந்து கொண்டு வேலைக்கு வரக் கூடாது என்று ஜி4எஸ் என்ற உள்நாட்டு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் சிறப்புரிமை யாருக்கும் அளிக்க முடியாது என்று கூறியது.


இந்த சட்டம் எந்த இடத்தில் பொருந்திப் போகிறதோ அங்கு தலையில் ஸ்கார்ப் இட்டுக் கொள்ளும் உரிமையை ஒரு பணி உரிமையாளர் கட்டுப் படுத்தும் போது அவர் பணியாளரை மதம் மற்றும் நம்பிக்கையை வைத்து தாழ்வுபடுத்தவில்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளவும் முடியும். பௌகா னொமி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்தது.
பணி செய்யும் இடங்களில் ஸ்கார்ப் அணிய மத நம்பிக்கை அடிப்படையில் தடை செய்யவில்லை. கம்பெனி உரிமையாளர் தனது கஸ்டமரை திருப்திப்படுத்த விரும்பினார் என்று கூறியது.


மத அடையாளம்


தனது தீர்ப்பின் மீது வலுவாக இருக்கும் நீதிமன்றம் பொறுப்பை கம்பெனிகளிடம் கொடுத்து விட்டு தப்பித்துக் கொண்டது. ஒரு வேலையாள் மத அடையாளம் அணிய தடை விதிப்பது உள்நாட்டு சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.இருப்பினும், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் இடத்தில் வேலை கேட்டு போனவரை தகுதி நீக்கம் செய்ய இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வார்களோ என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் சுதந்திரம் மற்றும் லிபர்ட்டி என்ற மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் மர்த்தா ஸ்பியூரியர் கூறும் போது, ஐரோப்பாவில் உள்ள எங்கள் அனைவரையும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்களாக மாற்றுவதற்கு பதில் எங்கள் மத நம்பிக்கைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை பாதுகாப்பதில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.


Who's Online

We have 50 guests and one member online

  • ymegywu