சவூதி அரேபியாவில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கி, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் அந் நாட்டின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் பின் அல் சவூத் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


இந்த உத்தரவு மார்ச் 29ம் தேதி முதல் 90 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.


பொது மன்னிப்பு NATIONAL FREE OF VIOLATORS என்ற தலைப்பின் கீழ் இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.


இதற்கு முன்பு கடந்த 2013 ம் ஆண்டு, மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் 10-05-2013 அன்று ஒரு பொது மன்னிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தியத்தூதரகத்தின் உதவியுடன் ரியாத் மண்டல தமுமுக மக்களுக்கு ஆற்றிய சேவை மறக்க முடியாதவை.


தற்போது அறிவித்துள்ள பொது மன்னிப்பு அறிவிப்பு குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 23ம் தேதி வியாழக்கிழமை மாலையில் இந்திய சமூகத்தின் தன்னார்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளையும் அழைத்து பொது மன்னிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் தூதரக முதன்மை செயலாளரின் அறிமுக உரையுடன் கலந்துரையாடல் துவங்கியது.


கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இப்பொது இந்தியச் சமூகத்திற்கு பணியாற்றுவது சம்பந்தமாக விரிவாக விவரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேதகு இந்திய தூதர் அஹமது ஜாவத் அவர்கள் பொது மண்ணிப்பு குறித்து தெளிவான விளக்கமும் அதை தொடர்ந்து சமூகநல அமைப்பின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்தார்.
அந்த கலந்துரையாடலில் ரியாத் மண்டல த.மு.மு.க சார்பாக, தாயகத்திலிருந்து ரியாத் வருகைபுரிந்துள்ள மமக மாநில பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் ரியாத் மண்டல செயலாளர் மீமிசல் நூர் முஹம்மது, மண்டல மமக செயலாளர் ஆளூர் நிசார் அஹமது, சமூக நலத்துறை செயலாளர் ஜமால் உமரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


ரியாத் மண்டல தமுமுக சார்பாக, இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்


இந்த பொது மன்னிப்பு அறிவிப்பு சம்பந்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழி பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், தூதரகத்தை தொடர்புகொள்ளும் நம் நாட்டினருக்கு ஈ.சி என்று சொல்லக்கூடிய அவசர கடவுச் சீட்டுகளை தாமதமின்றி வழங்க சிறப்பு கவுன்டர்களுடன் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் நாட்டின் (சவுதியில்) தொலை தூரத்தில் மற்றும் கிராமபுறம் மற்றும் பாலைவனப் பகுதிகளில் பணியாற்றும் நம் தேசத்தவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை கொண்டு சேர்க்கும் விதமாக தமுமுக உள்ளிட்ட இந்தியச் சமூகத்தின் தன்னர்வ தொண்டு அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


பொது மன்னிப்பின் விபரங்கள்.


ஹஜ்,உம்ரா,ஜியாரத்(விசிட் விசா) மூலம் வந்தவர்கள்:


ஹஜ்,உம்ரா,ஜியாரத் (விசிட் விசா) மூலம் சவுதி அரேபியாவிற்க்கு வந்தவர்கள் உரிய கால தவனைக்கு மேல் தங்கி இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது பாஸ்போர்ட் காலவதியாக ஆகாமல் இருந்தால் அவர்கள் வைத்துள்ள பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள எந்த விமானம் நிலையம் மூலமாகவும் தனது சொந்த விமான டிக்கெட் மூலம் தாயகம் திரும்பலாம்.


சவுதி அரேபியாவில் பணியாற்றுபவர்களுக்கான விதிமுறைகள்:


1. சவுதி அரேபியாவிற்க்கு எம்பீளாய்மென்ட் விசா மூலம் வந்தவர்களுக்கு தனது ஸ்பான்சர் என்று சொல்லும் கபீலுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உரிமையாளரை விட்டு வெளியே போய் பணியாற்றியவர்கள் உரிமையாளர் மூலம் (ஹுரூப்) புகார் கொடுக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்தலாம். அவர்களுடைய இந்திய ஆவணம் பாஸ்போர்ட் காளாவதியாகமல் இருந்தால் அவர்கள் நேரடியாக பாஸ்போர்ட் (ஜவஸத்) அலுவலகம் உரிய நடைமுறைகளை முடித்து தாயகம் செல்லலாம்.


2. எல்லை தான்டிய வெளிநாட்டினர் சவுதி அரேபியாவிற்கு அருகாமை நாடுகளில் இருந்து தரைமார்க்கமாக தவறு தலாகவே அல்லது கபீல் மூலமாகவே வந்து உரிய ஆவணம் இன்றி தவிப்போர், அவர்கள் இந்தியர்கள் என்பதற்கு உரிய சான்றிதழ்கள் அளித்து தூதரகத்தில் இருந்து அவசர கடவுச் சீட்டு பெற்று பாஸ்போர்ட் அலுவலக நடைமுறைகளை முடித்து அவரது சொந்த பயணச் சீட்டில் தாயகம் செல்லலாம்.


3.சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு வந்து உரிமையாளருடன் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக உரிமையாளரிடமிருந்து இருந்து வெளியேறி வேறு நிறுவணங்களில் பணியாற்றுவர்கள் யாரிடம் எல்லாம் பாஸ்போர்ட் இல்லையோ அவர்கள் தனது இக்காம அல்லது விசா காப்பி, அல்லது சவுதி விமான நிலையத்தில் வழங்கி இருக்கும் நுழைவு எண் போன்ற ஆதாரங்களை அளித்து தூதரகத்தின் மூலம் அவசர கடவுச் சீட்டு பெற்று தனது சொந்த பயணச் சீட்டுடன் தாயகம் புறப்படலாம்.


பொது மண்ணிப்பின் சில முக்கிய அம்சங்கள்:

 • இது பழைய நித்தாகத் சட்டம் போல் கிடையாது

 • இங்கு சட்டத்திற்க்கு புறம்பாக தங்கி இருப்பவர்கள் தனது சொந்த நாடுகளுக்கு செல்வதற்க்கான வாய்ப்பு மட்டுமே.

 • இந்த பொது மண்ணிப்பின் ஜவஷாத் வேலைகள் பழைய நித்தாகத் காலம் போன்று நீண்ட வரிசையிலும் நெரிசலிலும் சிக்க வேண்டிய அவசியம் இல்லை அனைத்தும் வலைதளப் பதிவு மற்றும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன.

 • இந்திய தூதரகம் மூலம் மேற்பட்ட 11இடங்களில் இதற்கான மையங்கள் திறக்கப்பட உள்ளன.
  (தமாம்,ஜுபைல்,புரைதா,ஹைல், வாடிதவாசீர், அல்கஃப்சி, அல்-ஜுவ்ப், ஹப்ரல் பாத்திரன் )

 • இ.சி. எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் 5முதல் 7 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

 • மார்ச் மாதம் 2017 ஆண்டு 20ம்தேதிக்கு முன் யாருகெல்லாம் ஹுரூப் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் இதை பயன்படுத்தி தாயகம் செல்லலாம்.
  மதீலுப் என்னும் உறுதி செய்யப்பட்ட குற்றங்களில் அல்லது வழக்கில் உள்ளவர்கள் இதை பயன்படுத்த முடியாது.

 • சவுதி அரேபியாவிற்க்கு வேலைக்கு வந்த அதே நேரத்தில் தனது கபீல் (ஸ்பான்ஸர்) இதுவரை இக்காமா அடிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாயகம் செல்லலாம்.

 • பல ஆண்டுகணக்கில் அல்லது மாத கணக்கில் யாருக்கு எல்லாம் இக்காமா அடிக்கப்படவில்லையே அவர்கள் இந்த பொது மண்ணிப்பை பயன்படுத்தலாம்.

 • லேபர் கோர்ட்டில் கபீலுடன் வழக்கு உள்ளவர்கள் விரும்பினால் இந்த வாய்ப்பு மூலம் தாயகம் செல்லலாம். (விதிகளுக்கு உட்பட்டது)

 • உரிமையாளரை விட்டு வெளியேறி பணியாற்றுபவர்கள், அந்த உரிமையாளர் மூலம் புகார் கொடுக்கப்படாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது.

 • 90 நாட்கள் அமலில் இருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக தாயகம் திரும்பலாம்.

 • ரியாத் தூதரகத்திற்கு உட்பட்ட 11 இடங்களில் இ.சி.படிவம் சமர்பிக்கலாம் அதே போன்று அங்கேய இ.சி. பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்.

 • இ.சி.பாஸ்போர்ட் பெற இக்காமா காப்பி, விசா பக்கம் உடைய முதல் மற்றும் கடைசி பக்கம் பாஸ்போர்ட் காப்பி, ஒரு புகைப்படம் ஆகியவை அளிக்க வேண்டும். எல்லா விண்ணபங்களும் நேரடியாக தூதரகமே அல்லது தூதரக அங்கிகாரம் பெற்ற மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.


சவூதியில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்த பொது மன்னிப்பு காலத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறது. மேலதிக விபரங்களுக்கு ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும் (0559713261, 0569713663 மிமிசல் நூர் முஹம்மது மண்டல செயலாளர்.)


Who's Online

We have 52 guests and no members online