ஏழு தமிழர் விடுதலைக் குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை தாமதமின்றி உடனடியாக ஆளுநர் ஏற்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
கால் நூற்றாண்டுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலைச் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைச் செய்து இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
 
உச்சநீதிமன்றத்தின் கருத்துரையின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை   அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த தீர்மானத்தின் அடிப்படையில்  தமிழக ஆளுநர் அவர்கள் எவ்வித தாமதமுமின்றி  உடனடியாக தமிழக அமைச்சரவையின் இந்தப் பரிந்துரை ஏற்று ஏழு தமிழர்களை விடுதலைச் செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.