பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி யை மன வருத்தத்தையும் அளிக்கிறது.

நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் அவர்கள் சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருந்தவர். முத்துராமலிங்க தேவர், மூக்கையாத்தேவர் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தவர் சந்தானம் அவர்கள்.

சந்தானம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் மனிதநேய மக்க¢ள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.