திராவிடர் கழக பொருளாளர் மரு. பிறைநுதல் செல்வி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பிறைநுதல் செல்வி அவர்களின் மரணச் செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.


திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வந்த மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகச்சிறந்த மருத்துவராகவும், பேச்சாளராகவும், தான் கொண்ட பொருளாளர் பொறுப்பை திறம்பட செய்துவந்ததுடன், தமிழக உரிமைகளுக்காகத் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் உறுதியாக இருந்த பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவு திராவிடர் கழகத்திற்கு மிகுந்த பேரிழப்பாகும்.


பிறைநுதல் செல்வி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் மனிதநேய மக்க¢ள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.