நெல் ஜெயராமன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.


பாரம்பரிய "நெல்" விதைகளை பாதுகாத்து வந்ததால் "நெல்" ஜெயராமன் என்று அழைக்கப்பட்ட பாரம்பரிய விவசாய காவலன் நெல் ஜெயராமன் மறைவு விவசாயிகளுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.


இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்க அவர் ஆற்றிய பணி அளப்பறியது.


‘நெல்’ ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மனிதநேய மக்க¢ள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.