மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளித்ததை உடனே திரும்ப பெற கோரி  தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

 
 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்ட முதல் கட்ட அனுமதி அளித்தது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் “மேகதாதுவில் புதிய அணைக் கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதைக் கண்டித்தும் அந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசின் அனுமதியின்றி காவிரிப் பகுதியில் மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் அணைக் கட்ட பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனக் கர்நாடகத்திற்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரியும்”ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
 
தமிழக அரசு சட்டமன்றத் தீர்மானம் நி¬வேற்றியதுடன் இருக்காமல் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தேவையான அழுத்தங்களை கர்நாடக அரசிற்கு வழங்கிட மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.