பெரியார் சரவணன் கைது!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர். பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
ஏழு தமிழர்  விடுதலை செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த 7ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் அவர்களைத் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவதூறாக பேசினார் என வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இதுபோன்ற சர்வாதிகாரத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கிறேன்.

மக்கள் நலனுக்காகப் போராடும் போராட்டக்காரர்களைக் காரணமே இல்லாமல் பொய் வழக்கைத் தொடுத்து கைது செய்து வந்த காவல்துறை, தற்போது முதலமைச்சர் மற்றும் தமிழக அரசை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார்கள் என புதிய ஒரு விஷயத்தை ஆயுதமாகக் கையில் எடுத்து மக்கள் நல போராட்டக் காரர்களை ஒடுக்குவது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல.
 
எனவே, தமிழக காவல்துறை உடனே, பெரியார் சரவணன் அவர்களின் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.