திருவாரூர் இடைத்தேர்தல் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
 
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
 
தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பரப்புரை செய்து அவர் மகத்தான வெற்றியைப் பெற உழைப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் சாசனச் சட்டம், மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை கேலிக்கூத்தாக்கும் மத்திய பாஜகவையும், அதற்குக் கைப்பாவை அரசாகச் செயல்பட்டு மாநில உரிமைகளையும், தமிழக மக்கள் நலன்களையும் மத்திய அரசிடம் அடகு வைத்துள்ள அதிமுக ஆட்சியையும் அகற்ற இத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பதை உணர்ந்து திருவாரூர் வாக்காளர்கள் அனைவரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.