மனிதநேய மக்கள் கட்சி தலைவருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு

மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் செய்தி குறிப்பு:

தமிழகம் வருகை தந்திருந்த ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் இலங்கை அரசின் மாகாண நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறையின் ராஜாங்க அமைச்சருமான ஹெச். எம். எம். ஹாரீஸ் நேற்று (4.1.2019) மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் தமிழக அரசியல் நிலவரங்களைப் தொடர்பாக கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இச்சந்திப்பின் போது தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர். எம். அனிபா உடன் இருந்தார்.