பேரா. ஜெயராமன் கைது!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை :
 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.
 
இன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ஒஎன்ஜிசி  நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறை கைது செய்துள்ளது.
 
டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், எந்தவித அறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தார் செய்துள்ள செயல் அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
விவசயாத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதரத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற நாசகார திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களின் குரல் வலையை மத்திய-மாநில தொடர்ந்து நெறித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
 
எனவே, கைது பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.