தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் திரு. கே.எஸ். அழகிரிக்கும், செயல் தலைவர்களாக வசந்தகுமார், ஜெயகுமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயகுமார் ஆகியோருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழக சட்டசபையில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள கே.எஸ்.அழகிரி அவர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற, சமூகநல்லிணக்க கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப் பணியாற்றுவேன் என்று உறுதியெடுத்துள்ள கே.எஸ். அழகிரிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்