புல்வாமா தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள சிவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியனும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் உள்ளிட்ட 38 வீரர்கள் உயிரிழந்து விட்ட செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த கொடுர தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுப்பிடித்து அவர்களை சட்டத்தின் மூலம் தண்டனை பெற செய்ய மத்திய மற்றும் காஷ்மீர் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.என்று கேட்டுக் கொள்கிறேன்.