தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மாபெரும் தமிழ் அறிஞர் சு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் இன்று மரணமடைந்த தேர்ச்சி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.


மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முக திறமையாளராக விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.


சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் நம்முடைய காலத்தில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞர். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை உடையவராகவும், சிறந்த தமிழ் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.


தமிழின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு மகத்தானது. அனைத்து சமூகத்தினருடனும் நல்லிணக்கத்துடன் பழகிய்இனிய பண்பாளர், அவருடன் நெருங்கிப் பழகிய காலகட்டம் எனது வாழ்வின் இனிமையான காலகட்டமாகும்.


இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுடையவராகச் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் திகழ்ந்தார்.


சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு , கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைச் செய்து முடித்தவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.


சென்னையில் காலஞ்சென்ற மணவை முஸ்தபா அவர்களின் மீரா பவுன்டெஷன் சார்பில் வாரந்தொரும் லிங்கி செட்டி தெருவில் உள்ள மறைமலைகள் நூலகத்தில் அவர் ஆற்றிய சீறாப்புராண விளக்க உரை மிகத் தெளிவாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், ஆழ்ந்த புலமைக் கொண்டவராகவும் தமிழகமெங்கும் நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் இஸ்லாத்தைப் பற்றியும் சிறப்பான உரைகளை நடத்தியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.


அவருடைய மறைவு தமிழ்கூறும் நல்லுகிற்கு மிகப்பெரிய பேரிழப்பு குறிப்பாகத் தமிழக முஸ்லிம்களுக்கும் பெரும் பேரிழப்பாக உள்ளது. அவரை இழந்து வாழக்கூடிய அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.