இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள். கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளார்கள். உயிரிழநரதவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தார்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

இலங்கையில் 2009 போர் நிறுத்தத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரும் தாக்குதலாக அமைந்துள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக ஐ நா வின் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.