சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், சூழலியல் செயற்பட்டாளருமான பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாட்டின் உள்ள பொருளாதார மந்தநிலை குறித்து அறிய சேலத்திலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்குச் சென்ற சூழலியல் செயற்பட்டாளர் பியூஸ் மானுஷை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வடமாநிலங்களில் நடைபெற்றுவந்த இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.

பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும், இந்தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ள பியூஸ் மானுஷிற்கு உயரிய மருத்துவச் சிகிச்சை அளித்து அவருக்கு உரியப் பாதுகாப்பை அளிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்¢ எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.