தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரை பற்றி இழிவாகவும் அருவருக்கத்தவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.
சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த டிவிட்டர் பதிவு உள்ளது.

எனவே, இந்த பதிவுக்குக் காரணமாக இருந்த தமிழக பாஜகவின் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.