தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட தமிழக அரசு டாக்டர். முத்துலட்சுமி  ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

 நிதி உதவி

 இத்திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 4000/- குழந்தை பிறந்த பின்பும்,  பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ.4ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கருவுற்ற 8ம் மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கிக் கணக்கில் 3 தவணையாக இந்தத் தொகை வரவு வைக்கப்படும்

 விண்ணப்பிக்கும் முறை

கர்ப்பம் தரித்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமணை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று கர்ப்பத்தை உறுதி செய்து  தாய் & சேய் பாதுகாப்பு அட்டை பதிய வேண்டும். தனியார் மருத்துவமணை பிரசவங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.]

அந்த அட்டையில் பிஐசிஎம்இ என்று தமிழிலும் றிமிசிவிணி என்று ஆங்கிலத்திலும் உள்ள இடத்தில் உங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு எண்களை குறிப்பிடுவார்கள். அந்த எண் நீங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு விட்டீர்கள் என்பதை குறிக்கும்.  ஒவ்வொரு மாதமும் நீங்கள் பரிசோதனைக்கு செல்லும்போது அந்த அட்டையில் குறிப்புகள் எழுதுவார்கள்.

உங்கள் பகுதி அரசு செவிலியர்களிடம் உங்களின் பாஸ்போர்ட் சைஸ்  புகைப்படங்கள் இரண்டு மற்றும் ஆதார் அட்டை நகல் தேசியமயமாக்கபட்ட வங்கியில் உங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் வங்கியின் மின் பகிர்மான குறியீட்டு எண் (மிதிஷிசி சிளிஞிணி) ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்யவும்.

நிபந்தனைகள்

1. பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

2. இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும்

தகுதிகள்

 • நிதியுதவியைப் பெற கீழ்காணும் ஏதாவது ஒரு நிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளவர்கள்.
 • தமிழ்நாடு விவசாயத் தொழி லாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்ட உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள்.
 • குடிசை வீடு, சிறிய ஓட்டு வீடு மற்றும் சிறிய வாடகை வீட்டில் வறிய நிலையில் வசிப்பவர்கள்.
 • தொகுப்பு வீடுகள், சுனாமி அழிவினால் கட்டித்தரப்பட்ட வீடுகள் மற்றும் அரசு இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள்.
 • விவசாயக் கூலி வேலை, சலவைத் தொழில், ஆட்டோ முதலான வாகனங்களை தினக்கூலிக்கு ஓட்டுபவர்கள்.
 • கல்குவாரி, சுண்ணாம்பு காளவாய், செங்கல் சூளை போன்றவற்றில் தினக்கூலிக்கு வேலை செய்பவர்கள்.
 • சொந்த வீடு இருந்தும் கூலி வேலை செய்பவர்கள், நிலமற்ற ஏழைகள்.
 • குடும்பத் தலைவர் பருவ காலத்திற்கு ஏற்றவாறு வெளியூர் சென்று கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள்
 • பெண்கள் குடும்பத்தலைமைப் பொறுப்பேற்ற குடும்பங்கள், வேலைக்குச் செல்ல இயலாதவர்கள்.

தேவையான சான்றுகள்

 • தாய்சேய்நல அட்டையின் நகல்
 • இலங்கைத் தமிழர் எனில் புலம் பெயர்ந்தோர் சான்றிதழ் நகல்.
 • உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினராயின் அதற்கான அட்டையின் நகல்.
 • வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவராக இருப்பின் அதற்கான சான்றிதழ்.

குறிப்பு : விரைவில் இந்த ஆண்டு முதல் மகப்பேறு உதவித்தொகை ரூ 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்;    மாவட்ட ஆட்சியர் / மாவட்ட இணை இயக்குனர் சுகாதாரம் யிஞி பிணிகிலிஜிபி / 

மாநில அளவில் இயக்குனர்,  பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனரகம் எண்-359, 

அண்ணாசாலை,

தேனாம்பேட்டை, சென்னை-600006. 

Tel : 044-24320802 (O), (M)7708077177 Website : http://www.tnhealth.org.


Who's Online

We have 13 guests and no members online