மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டம்-திசைவழி

1. பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம்,


2 காது கேளாதோரை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபர்களுக்கு சலுகை வழங்கும் திட்டம்,


3 கை, கால்களை இழந்தோரை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு வழங்கும் நிதி உதவித் திட்டம்,


4. மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம். என நான்கு வகையான திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு அவர்களுக்கு உதவும் விதத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.


நிபந்தனைகள்


1. முதல் திருமணமாக இருக்க வேண்டும்.


2. திருமண உதவித் தொகைக்காக வேறு அரசு துறையில் விண் ணப்பித்திருக்கக் கூடாது


நிதி உதவி - தகுதிகள்


ரொக்கம் ரூ.12,500/- அரசு சேமிப்பு பத்திரம் ரூ.12,500 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.


சாதாரண கல்வித்தகுதி / படித்தவரை ரொக்கம் ரூ.25,000/- அரசு சேமிப்பு பத்திரம் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி பெற தம்பதியரில் ஒருவர் பட்டயம் / பட்டப்படிப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.
தேவையான சான்றுகள் விண்ணப்பிக்கும் முறை.


தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமணப் புகைப்படம், திருமண பதிவுச்சான்று
(அ) வழிபாட்டுத் தலத்தில் திருமணம் நடை பெற்றதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்பதற்கான சான்று பட்டதாரிகளுக்கு பட்டயம்/பட்டதாரி சான்று.
விண்ணப்பம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும்.


குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்:


மாவட்டங்களில்: மாவட்ட ஆட்சியர் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம்,கே.கே.நகர், சென்னை  78.
இணையதள முகவரி : www.scd.tn.gov.in/schemes.php.


Who's Online

We have 15 guests and no members online