தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி?


1.தகுதிகள் பெண்ணுக்கு 18 வயது,ஆணுக்கு 21 வயது இருந்தால் திருமண உதவி திட்டத்தில் 

10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மண பெண்ணுக்கு 25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம்,

பட்டப்படிப்பு படித்த மணப்பெண்ணுக்கு 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசு வழங்குகிறது.

2.ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் அளிக்கப்படும்.

3.தேவையான ஆவணங்கள் :

டிசி நகல்,மதிப்பெண் பட்டியல் நகல்,திருமண அழைப்பிதழ்,
வருமான சான்று 75 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

4.விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.

இணைய தளங்களிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

5.விண்ணப்பங்களை மாநகராட்சி,நகராட்சி பகுதிகளில் வசிப்போர் அந்தந்த அலுவலகங்களிலும்,

பேரூர்,கிராமப்புறங்களில் வசிப்போர் யூனியன் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு : ஆவணங்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு (இ) பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

 


Who's Online

We have 16 guests and no members online