ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.


வழங்கப்படும் உதவி


திட்டம் 1 ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.
திட்டம் 2 ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.


தகுதிகள்


திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.


திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


நிபந்தனைகள்


ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
மணமகளுக்கு 18 வயது,மணமகனுக்கு 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும்.


தேவையான சான்றுகள்


1. டி/சி நகல், திருமண அழைப்பிதழ், வருமானச்சான்று, பத்தாம் வகுப்பு படித்திருப்பின் அதன் மதிப்பெண் பட்டியல் நகல்.


2. பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று நகல்.


விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.


யாரை அணுகுவது


மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், பேரூர்,கிராமப்புறங்களில் வசிப்போர் யூனியன் அலுவலகத்தையும் அணுகி விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு : ஆவணங்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு (இ) பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


Who's Online

We have 17 guests and no members online