டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.

விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி


திட்டம் 1 ரூ.15 ஆயிரம் காசோலையாகவும் ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் தமிழக அரசால் வழங்கப்படும்.


திட்டம் 2 ரூ.30 ஆயிரம் காசோலையாகவும் ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் தமிழக அரசால் வழங்கப்படும்.


தகுதிகள் / நிபந்தனைகள்


திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.


திட்டம் 2- (a)பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


(b)வருமான வரம்பு இல்லை.


(c)மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு


திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேவையான சான்றுகள்


· விதவைச் சான்று மறுமணப் பத்திரிகை மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று திருமணப் புகைப்படம் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று
· விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.

யாரை அணுகுவது


மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், பேரூர்,கிராமப்புறங்களில் வசிப்போர் யூனியன் அலுவலகத்தையும் அணுகி விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு : ஆவணங்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு (இ) பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

குறிப்பு : சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in

குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியர் / மாவட்ட சமூகநல அலுவலர் /  மாநில அளவில்-சமூகநல இயக்குநர், சென்னை 600 005. 


Who's Online

We have 12 guests and no members online