மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி? இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் 01

காலனி ஆதிக்கத்தின் தாக்கம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் எனது தலைமுறை வளர்ந்து வந்தது. எங்களுக்கு முந்தைய பழைய தலைமுறை அடிமைத் தளையில் இருந்ததால் ஆங்கிலேயர்களுடன் ஒப்பிடும் போது தங்களை தாழ்ந்தவர்களாக கருதும் மனப்போக்கு அவர்களிடம் இருந்தது.

நான் பயின்ற பள்ளிக்கூடம் பாகிஸ்தானில் உள்ள, மற்ற மேதாவிப்பள்ளிக்கூடங்கள் போல் அமைந்திருந்தன.


விடுதலைப்பெற்ற பிறகும் இந்த பள்ளிக் கூடங்கள் பாகிஸ்தானிய மனப் பான்மை உடைய மாணவர்களை உருவாக்காமல் ஆங்கிலேய மனப் போக்குடைய மாணவர் களை தான் உருவாக்கின. இன்றும் அதே நிலை தான் நீடிக்கின்றது. பள்ளிக்கூடத்தில் எனக்கு ஷேக்ஸ்பியர் பற்றி கற்றுத் தரப்பட்டது. ஆனால் பாகிஸ் தானின் தேசிய கவிஞரான மகாகவி அல்லாமாஇக்பால் பற்றி எங்களுக்கு கற்றுத்தரப் படவில்லை. இஸ்லாமிய பாடம் இருந்தது. ஆனால் அந்த வகுப்புகளை யாரும் கண்டிப் புடன் எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளிக் கூடத்தை விட்டு வெளி யேறிய பிறகு நாட்டில் உள்ள மேதாவி மக்களில் ஒருவனாக நான் கருதப் பட்டேன். இதற்கு ஒரே காரணம் நான் சரளமாக ஆங்கிலம் பேசியதும் மேற் கத்திய ஆடைகளை அணிந்ததும் தான்.


பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பிய போதும், நான் எனது சொந்த கலாச்சாரத்தை பிற்போக்குத்தனமானது என்றும் எனது மதத்தை காலங்கடந்தது என்றும் கருதி வந்தேன். எனது வட்டா ரத்தில உள்ளவர்களில ஒருவர் தொழு தால், தாடி வைத்தால் அல்லது மதத்தைப் பற்றி பேசினால் அவருக்கு உடனடியாக முல்லா பட்டம் சூட்டி விடுவோம்.

மேற்கத்திய ஊடகங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தின் காரணமாக எங்கள் உள்ளங்கவர்ந்த ஹீரோக்களாக விளங்கியவர்கள் மேற்கத்திய திரைப்பட நடிகர்களும், பாப்பிசைப்பாடகர்களும் தான். இந்த மனப்போக்குடன் நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது அங்கும், எனக்கும் இந்த மாயையில் இருந்து விடுபடுவது சுலபமாக இருக்கவில்லை. ஆக்ஸ்போர்டில் இஸ் லாம் மட்டுமின்றி அனைத்து மதங் களும் காலத்திற்கு ஒவ்வாதவை என்ற கருத்தே நிலவியது. மதத்தின் இடத்தை அறிவியல் பிடித்திருந்தது. தர்க்க ரிதியாக ஒன்றை நிரூபிக்க இயலாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ள அங்கு யாரும் தயாராக இல்லை. இயற்கை நியதிகளை மீறியவை அனைத்தும் திரைப்படங்களில் மட்டுமே நடக்க கூடியவை என்ற நிலையில் ஒதுக்கப்பட்டன. மனிதனின் படைப்பு குறித்த உண்மைகளை மறுத்து, இதன் முலம் மதங்களையும் மறுத்த டார்வின் போன்றவர்கள் எழுதிய அரை வேக் காட்டுதனமான பரிணாம வளர்ச்சி தத்துவங்கள் பெரிதும் மதித்து போற்றப் பட்டன. ஐரோப்பிய வரலாறு மதத்தினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை பிரதிபலி­ப்பதாக அமைந்திருந்தது. பொது விசாரணை நடை பெற்ற காலக் கட்டத்தில் மதத்தின் பெயரில் கிறிஸ்தவ மதகுரு மார்கள் அரங்கேற்றிய கொடுமைகள் மேற்கத்தியர்களின் மன தில் ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

மதசார்பின்மையின் மீது மேற்கத்திய உலகிற்கு இருக்கும் கடும் வலுவான நம்பிக்கைக்கு என்ன காரணம் என்று அறிய விரும்புபவர்கள் ஸ்பெயினில் உள்ள கார்டோபா நகரத்திற்கு செல்ல வேண்டும். ஸ்பெயினில் பொது விசா ரணை நடைபெற்ற காலக் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சித்தரவதை சாதனங்களை அவர்கள் பார்வையிட வேண் டும். அறிவியலார்களை வழி கேடர்கள் என்று கருதி மத குருமார்கள் அவர்களுக்கு செய்த கொடுமைகள் ஐரோப் பியர்கள் மனதில் அனைத்து மதங்களும் கொடூரமானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் என்னை இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் கொண்டு சென்றது பெரும்பாலான மதப் போதகர்கள் மார்க் கத்தை அரை குறையாக பின்பற்றியதுதான். சுருக்கமாக சொல்ல வேண்டு மெனில் அவர்களது சொல்லுக்கும், செயலுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது.மேலும் மார்க்கத்தின் தத்துவங்களை விளக்கிச்சொல்லாமல் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.

மனிதர்கள், மிருகங்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நான் கருதுகிறேன். மிருகங்களை பயிற்சி மூலம் சொல்லுக்கு கட்டுப்பட வைக்கலாம். ஆனால் மனிதர்களை அறிவார்ந்த முறையில் உணர வைக்க வேண்டும். இதன் காரணமாக தான் திருக்குர்ஆன் சிந்திக்குமாறு அறிவுறுத்துகின்றது.

அனைத்தையும் விட மிக மோசமானது பல்வேறு தனிநபர்களும், குழுக்களும், இஸ்லாத்தை தங்கள் அரசியல் லாபத் திற்காக வளைத்துக்கொண்டது ஆகும்.

இத்தகைய சூழலி­ல் வளர்ந்த நான் ஒரு நாத்திகனாக மாறாமல் இருந்ததை ஒரு அதிசயம் என்றே குறிப்பிடலாம். இதற்கு ஒரே காரணம் எனது குழந்தை பருவம் முதல் எனது தாயார் எனக்கு ஊட்டிய வ­லிமையான மார்க்க உணர்வு தான். எனது மனம் இந்த உணர்வை ஏற்றுக்கொண்டது என்பதினால் அல்ல, மாறாக எனது தாயார் மீதான அன்பின் காரணமாகத்தான் நான் தொடர்ந்து முஸ்லி­மாக இருந்தேன்.

இருப்பினும் நான் இஸ்லாத்தை அரைகுறையாக தான் பின்பற்றினேன். எனக்கு விருப்பமான மார்க்க செயல்பாடு களை மட்டும் நான் பின்பற்றினேன். இருபெருநாள் தொழுகைகள் மற்றும் சில பொழுது எனது தந்தை வற்புறுத்தி அழைத்துச்செல்லும் போது மட்டும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ஆகியவற்றை மட்டும் நான் தொழுது வந்தேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நான் ஒரு பழுப்பு நிற துரையாக (பிரவுன் சாஹிப்) மாறி வந்தேன். ஏனெனில் எனக்கு அதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருந்தன. நான் படித்த பள்ளிக்கூடம் பல்கலைகழகம் மட்டுமல்லாமல் ஆங்கிலேய மேட்டு குடிகளும் என்னை அங்கீகரித்திருந்தார் கள். இந்த நிலையில் வாழ்ந்த நான் எப்படி மாறினேன்?

அந்த மாற்றம் ஒரு இரவு பொழுதில் ஏற்படவில்லை.

(அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் தொடரும்)